• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

அண்ணாமலை தரக்குறைவாக
பேசுகிறார்: காயத்ரி ரகுராம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் கீழ், வார் ரூமில் அருவெறுக்கத்தக்க தனிப்பட்ட தாக்குதலுக்கு உள்ளாகிறோம் என்று காயத்ரி ரகுராம் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் மாநிலத் தலைவர் காயத்ரி ரகுராமை கட்சியிலிருந்து ஆறு மாத காலத்திற்கு சஸ்பெண்ட் செய்து அண்ணாமலை நடவடிக்கை எடுத்தார். இந்த நடவடிக்கைக்குப் பிறகு காயத்ரி ரகுராம் தொடர்ந்து அண்ணாமலை மீது விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையின் கீழ் இயங்கும் வார் ரூமில் இருந்து தரக்குறைவான தனிப்பட்ட தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதாகவும், இதுகுறித்து காவல் துறை விசாரணை செய்ய வேண்டும் என்றும் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள காயத்ரி ரகுராம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் கீழ், வார் ரூமில் அருவெறுக்கத்தக்க தனிப்பட்ட தாக்குதலுக்கு உள்ளாகிறோம். எனவே, தமிழக காவல் துறை இதுதொடர்பாக விசாரணை செய்ய வேண்டும். பெண்கள் குறித்து தரக்குறைவான கருத்துகளை தெரிவிக்கின்றனர் என்று பதிவிட்டுள்ளார்.