• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஓ.பி.எஸ் தாயார் மறைவுக்கு ஆறுதல் கூறிய அண்ணாமலை..!

Byவிஷா

Mar 8, 2023

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் ஓ.பழனியம்மாள் மறைவிற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று நேரில் வருகை தந்து மரியாதை செலுத்தினார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையில் உள்ள ஓபிஎஸ்-ன் இல்லத்திற்கு வந்த அண்ணாமலை ஓபிஎஸ்-ன் தாயார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அஞ்சலி செலுத்தியதோடு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது சகோதரர் ஓ ராஜா ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின் செய்தியாளர்களுக்கு அண்ணாமலை அளித்துள்ள பேட்டியில்..,
கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு தார்மீக அடிப்படையில் தகுந்த மரியாதை வழங்கப்பட வேண்டும். கட்சி நிர்வாகிகள் உணர்ச்சிவசப்படக் கூடாது. தொண்டர்கள் கொள்கை மற்றும் கோட்பாடுகளை மீறி செயல்படக் கூடாது என்று கூறினார். மேலும் திமுகவை பொருத்தவரை அரசியல் கொள்கை என்பது எப்போதுமே பிரிவினைவாதம். வடக்கு – தெற்கு என்று அப்போதே ட்ரவிடிஸ்தானம் வேண்டும் என்று கேட்டவர் தந்தை பெரியார். அவர்களது வழித்தோன்றல்ளாக இன்று திமுகவினர் உள்ளனர். அதை அம்பேத்கர் ஆதரிக்கவில்லை அப்போதே அதையெல்லாம் மறைத்துவிட்டு தற்போது திமுகவினர் ஒரு யுனைடெட் இந்தியா வேண்டும் என்று பேசுவது பித்தலாட்டம் என்றார்.
பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற ஈரோடு இடைத்தேர்தல் ஒரு முன்னோட்டம் என்று திமுக கூட்டணி கட்சியினர் பேசி வருவது ஒரு வேலை திமுக கூட்டணி கட்சி வெற்றி பெற்று எம்பி ஆன அவர்கள் பேசுவது சாரதா என்ன கலராயிட்ட என்பார்கள் திமுகவை தாண்டி கூட்டணி கட்சியினருக்கும் இந்த வியாதி போய்விட்டது. வெளி மாநில தொழிலாளர்கள் குறித்து பிரசாந்த் கிஷோரும், நான் கூறிய அதே கருத்தைதான் டிவிட்டர் வாயிலாக தெரிவித்திருந்தார். அப்படி என்றால் அவர் மீதும் வழக்குத் தொடுப்பார்களா? எனக் கூறினார்.