• Tue. Feb 3rd, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

கோவையில் அண்ணாமலை பட்ஜெட் விளக்கம்..,

BySeenu

Feb 3, 2026

​”விஜய்யின் இன்ஜினில் ஆயில் இல்லை ; தி.மு.வினருக்கு அண்ணா பற்றி எதுவும் தெரியாது” – பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை !!!
கோவையில் அண்ணாமலை பேட்டி : 2026 பட்ஜெட் சிறப்பம்சங்கள் மற்றும் தி.மு.க, விஜய் மீதான அதிரடி விமர்சனம்.

அண்ணாமலை; தேர்தல் போட்டி குறித்து விளக்கம்.

2026 மத்திய பட்ஜெட் குறித்து பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர் சந்திப்பு.

மத்திய பட்ஜெட்டில் உட்கட்டமைப்புக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு பட்ஜெட் நான்கு லட்சம் கோடிக்கு போடப்பட்டாலும், செலவினம் அதிகம் உள்ள பட்ஜெட் ஆக உள்ளது. குறிப்பாக உட்கட்டமைப்பு தமிழ்நாடு அரசு விரைவாக ஒதுக்கி உள்ளது.
ஆனால் மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் அதிகமாக ஒதுக்கி உள்ளது. இந்த ஆண்டு 14 லட்சம் கோடி ஒதுக்கி உள்ளது. 5 ஆண்டு நிதி நிலை அறிக்கை என்பது மாநில அரசுக்கு மத்திய அரசுக்கும் நிதி ஒதுக்கீடு தொடர்பானது.

16 வது நிதி நிலை குழு அறிக்கையை மத்திய அரசு முழுமையாக ஏற்றுக் கொண்டு உள்ளது. இதில் ஆங்கிலத்தில் நாம் கட்டக் கூடிய வருமான வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும், மத்திய அரசு மூலம் இவ்வாறு ஒவ்வொரு மாநில அரசுக்கும் எவ்வாறு பிரித்து கொடுக்கப்படுகிறது என்பது குறித்து கூறுகிறது.

இந்த நிதி பங்கீடு 33 சதவீதமாக இருந்தது. பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு 15 வது மற்றும் 16 வது விதி நிலை குழு ஒதுக்கீட்டில் 41 சதவீதமாக உயர்ந்து உள்ளது. 42 சதவீதம் ஜம்மு காஷ்மீருக்கு பிரித்துக் கொடுக்கப்படுகிறது.
இந்த நிதியைப் பிடித்துக் கொடுப்பதில் ஒரு முறையை மத்திய அரசு செய்து வருகிறது. அதிக வரி கொடுக்கும் மாநில அரசு இந்த நாட்டின் வளர்ச்சிக்கு அதிக பங்கு கொடுக்கும், மாநில அரசுக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த நிதிநிலை குழு நமக்கு அங்கீகாரம் கொடுத்து உள்ளது.

மக்கள் தொகை 15 சதவீதம், ஒரு மாநிலத்தின் பரப்பளவு, 15 சதவீதம், பணக்காரர்கள் மற்றும் ஏழைகளுக்கான பங்கீடு 45 சதவீதம், வரி கொடுப்பதை வைத்து 2.5 சதவீதம் மக்கள் தொகை கட்டுப்படுத்துதல் 15 சதவீதம், இயற்கை வளத்தை பாதுகாத்தல் 15 சதவீதம், போன்றும் குறிப்பாக ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மாநில அரசு எவ்வளவு பங்கு செலுத்துகிறது என்பது குறித்து 15 சதவீதம் என வழங்கப்படுகிறது.

உத்தர பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு குறைந்து உள்ளது. ஆனால் புதிய முறைப்படி நமக்கு அதிகமாகி உள்ளது. மாநில அரசின் நிதிப் பதிவு ஒரு லட்சத்து ஐந்தாயிரம் கோடி இந்த பட்ஜெட்டில் உடனடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளனர். ஆனால் மத்திய அரசு பட்ஜெட்டை பற்றி குறை சொல்வது வழக்கமான வாடிக்கை தான்.

தமிழக முதலமைச்சர், ம.தி.மு.க பொதுச் செயலாளர் ஆகியோர் குறை கூறி உள்ளார்கள். இந்த பட்ஜெட்டில் 7 முக்கியமான அம்சத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து உள்ளார்கள். அதன்படி தமிழ்நாட்டில் பயோ பார்முலாவிற்கு முக்கியத்துவம் கொடுத்து உள்ளார்கள்.
பயோ பார்முலா சக்தி என்பதற்கு 5000 கோடி ஒதுக்கி உள்ளார்கள். இதை பயன்படுத்தி தயாரிப்பு மையத்தை உருவாக்க முயற்சி செய்து உள்ளார்கள். செமி கண்டக்டர் மிஷனுக்கு 40 ஆயிரம் கோடி ஒதுக்கி உள்ளார்கள். எலக்ட்ரானிக் காம்பவுண்ட் மேனுஃபாக்சரிங் வரைக்கும் முக்கியத்துவம் கொடுத்து, அதற்கும் 40 ஆயிரம் கோடி ஒதுக்கி உள்ளார். வேதியல் பார்க் 3 அறிவித்து உள்ளார்கள். இதை தமிழக அரசு பெற வேண்டும்.

டெக்ஸ்டைல் பார்க் தமிழ்நாட்டிற்கு மிகவும் பயன் பயன்படும். சிறு, குறு தொழில்கள் மூலதனம் நிதிகொடுப்பதற்காக பத்தாயிரம் கோடி ஒதுக்கி உள்ளார்கள்.

குறுந்தொழிலுக்கு மட்டும் 2 ஆயிரம் கோடி ஒதுக்கி உள்ளார்கள். இதை தமிழ்நாடு முழுமையாக பயன்படுத்தி இளைஞர்கள் வேலைவாய்ப்பை முழுமையாக உருவாக்க வேண்டும்.

குறிப்பாக இந்த பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு தென்னை மர விவசாயிகள் தேங்காய் மரம் நடுவதற்கு உற்பத்தியை பெருக்குவதற்கு 1 ஒரு கோடி விவசாயிகளுக்கு, தன்னை மேம்பாடு அறிவிக்கப்பட்டு உள்ளது. 2030 க்குள் இந்தியன் கோகோ என்பதற்காக புதிய திட்டம் அறிமுகம் செய்து உள்ளனர்.

தமிழ்நாட்டில் மகளிர் வேலை குழு அதிகம் உள்ளது. சீமாஎட் என்ற பெயரில் அவர்கள் கடை தடங்கி உள்ளனர். அதேபோன்று பெண்கள் விடுதி திட்டம் அறிவித்து உள்ளார்கள்.

தமிழக அரசு அறிவித்து உள்ள நிதியை மத்திய அரசு தான் கொடுக்கிறார்கள். நேற்று கோவை விமான நிலையத்தில் வைகோ, காற்றில் கோட்டை கட்டுவதாக கூறி உள்ளார்.

53 லட்சம் கோடி ரூபாய்க்கு பட்ஜெட் மட்டும் கூட, ஆரோக்கியமான சூழ்நிலை உருவாக்க. வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசம் 4.3 என்று தான் உள்ளது. இது அனைத்து தரப்பு மக்களுக்குமான பட்ஜெட். சிறு, குறு தொழில் நிறுவனங்கள் என அனைவரும் வரவேற்று உள்ளனர்.

பழம்பெறும், தொல்பொருட்கள் இருக்கக் கூடிய அரிச்சநல்லூர், உள்ளிட்ட பகுதிகளுக்கான நிதி ஒதுக்கி உள்ளார்கள். கலைஞர் அருங்காட்சியகத்திற்கு முதலமைச்சர் நிதி ஒதுக்கி உள்ளார். அதே போன்று அரிச்சநல்லூருக்கு நிதி ஒதுக்கி உள்ளோம் இது அனைவருக்கும் பயன்பெறும்.

ரயில்வே துறையில் 2026 ல் 2027 ஆம் ஆண்டுக்கு 7 611 கோடி ஒதுக்கி உள்ளார்கள். தமிழ்நாட்டில், 35,701 வருமானம் உள்ள வேலை வாய்ப்பு நடந்து உள்ளது. ரயில்வே நிலையத்தை தர உயர்த்த நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. வந்தே பாரத், அம்ரித் பாரத் இயக்கப்பட்டு உள்ளது. 16 லட்சம் கோடி இந்தியா முழுவதும் நிதி ஒதுக்கி சென்னை டு பெங்களூர், ஹை ஸ்பீட் நெட்ஒரக் மாற்றப்பட்டு உள்ளது. 300 முதல் 320 கிலோ மீட்டர் வேகம் வரை இயக்கப்படுவதால் விரைவில் செல்ல முடியும்..
அதேபோன்று சென்னை ஹைதராபாத் ரயில்வே சேவையும் கொண்டு வரப்பட உள்ளது.

இதை அனைவரும் வரவேற்கிறோம். இளைஞர்கள் ஒரு தலைநகரத்தில் இருந்து இன்னொரு தலைநகரத்திற்கு மிகவும் வேகமாக பயணிக்க முடியும்.

நேற்று இரவு பிரதமர் நரேந்திர மோடி நல்ல செய்தியை நாட்டிற்கு வழங்கி உள்ளார். இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இழுபடியாக இருந்த அமெரிக்க ஒப்பந்தத்தை நேற்றிரவு முடிவுக்கு வந்து உள்ளது. பிரதமர் இது குறித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவு செய்து உள்ளார்.

முதலில் அமெரிக்க அதிபற்றம் 25 சதவீதம் வரி விதித்தார். அதன் பிறகு ரஷ்யாவிற்கு ஆயுதம் ஆகியதால் இன்னொரு 25 சதவீதம் வரி விதித்தார். இதனால் அமெரிக்காவிற்கும் இந்தியாவுக்கும் 50 சதவீத வரி இருந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு முதல் 18 வரி என்று நேற்று பிடித்து உள்ளார். மற்ற நாடுகளுக்கு உதித்த வரை 18 சதவீதத்திற்கு மேல உள்ளது. அமெரிக்காவின் அருகில் உள்ள நாடுகளுக்கும் 18 சதவீதத்திற்கு மேல் உள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா இந்தியாவிற்கு 18 சதவீதம் மட்டும் வரி விதித்திருப்பது நிச்சயமாக வரவேற்கத்தக்கது.

இந்த சூழ்நிலையில் 18 சதவீதம் மற்றும் வரி என்பது வரவேற்கத்தக்க ஒன்று. 22 நாடுகளுடன் நாம் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை கொண்டு வருகிறோம். கொங்கு பகுதிக்கு மற்றும் தென் பகுதிக்கு அதிக அளவிலான உற்பத்தி கேந்திரங்கள் உருவாக உள்ளன.

தமிழகத்தின் வளர்ச்சி குறிப்பாக நாம் தமிழகத்தில் வளர்ச்சி அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது..

Msme பொறுத்த வரை கடன் எந்த வகையிலும் குறையவில்லை. 10 ஆயிரம் கோடி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதே போன்று தொழிலாளர்கள் முதலீடு செய்யும் மூலதனத்தில் மத்திய அரசும் பங்கு வழங்குகிறது.
எனவே சிறு குரு தொழில்களுக்கு மத்திய அரசு எப்போதும் துணை நிற்கும். மாநில அரசு மத்திய அரசை தொடர்ந்து குற்றம் சுமத்துவதை விட்டுவிட்டு நாம் இதற்கு என்ன செய்கிறோம் என்பதை கூற வேண்டும். சிறு, குறுந் தொழில்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் உள்ளது.

கிழக்கு இந்திய நிறுவனங்கள், ஜப்பான் போன்ற நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து உள்ளோம் எனவே இதை அடுத்த கட்டத்திற்கு செல்லும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சிறு, குறு தொழிலில் உற்பத்தி அதிகரித்து உள்ளது. எனவே எதிர்க்கட்சியினர் சிறு குறு தொழில்களுக்கு என்ன செய்தார்கள்?

மத்திய அரசு மற்ற நாடுகளை பார்த்து 20 ஆண்டுகளில் நமது நாட்டின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை பார்த்து தான் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்கள். மித்ரா பார்க்கை இதற்கு முன்பு விருதுநகருக்கு கொண்டு சென்றார்கள்.. முன்னாள் மத்திய அமைச்சர் திருச்சூருக்கு கொண்டு சென்றார்கள். அது இப்போது எப்படி இருக்கிறது..

3 வேதியியல் மையத்தை நாம் போட்டி போட்டு வாங்க வேண்டும். மத்திய அரசு செய்து உள்ள இந்த திட்டங்களை மாநில அரசு பயன்படுத்துகிறதா ? என்பதை நாம் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டின் பட்ஜெட் நாலு லட்சம் கோடி. ஆனால் 52 லட்சம் கோடி பட்ஜெட்டில் நான் 14 லட்சம் கோடி மத்திய அரசு உள் கட்டமைப்பிற்கு ஒதுக்கி உள்ளார்கள்.

ஆனால் தமிழக அரசு எவ்வளவ ஒதுக்கி உள்ளது. உள்கட்டமைப்புக்கு ஒன்றும் செய்யவில்லை. கடன் வாங்கி வாங்கி வட்டி செலுத்திக் கொண்டு இருக்கிறார்கள். எனவே தமிழ்நாட்டு பட்ஜெட்டை குறித்து நான் பேச விரும்பவில்லை.

16 வது விதி குழு நல்ல செயல்படக் கூடிய மாநிலத்திற்கு மரியாதை கொடுத்து உள்ளார்கள். ஆனால் அதற்கு முதலமைச்சரிடம் இருந்து பாராட்டு வரவில்லை. வெறும் குற்றத்தை மட்டுமே காலை முதல் இரவு வரை சுமத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

ஆந்திர மாநில முதல்வர் அவரது மாநிலத்திற்கு சிறப்பாக பெற்று செய்து கொண்டு இருக்கிறார்கள். தோல்வி உருவி என்பதற்கு நிதி ஒதுக்கவில்லை என்று கூறுவது தவறு. எந்த மாநிலத்திற்கு ரயில்வேயில் 2 லைன் கொடுத்து உள்ளார்கள்.
அமைச்சர் டி.ஆர்.பாலு எங்களுடைய போட்டி ஐரோப்பாவிற்கு இடையே தான் என்று கூறி உள்ளார்.

சும்மா பேசுவதற்காக பேசக் கூடாது. 12 லட்சம் ஆண்டு வருமானம் உள்ளவருக்கு ஜீரோ வரி என்று கூறி உள்ளோம்.

இங்கு தொழில் தொடங்க வேண்டிய நிறுவனங்கள் ஏன் ? ஆந்திரா, விசாகப்பட்டினம் செல்கிறது. Google ஏன் ? வேறு மாநிலத்திற்கு சென்றது. எனவே முதலமைச்சர் எதை எடுத்தாலும் குறை சொல்லிக் கொண்டே இருக்காமல் தமிழ்நாட்டின் வளர்ச்சியை பார்க்க வேண்டும்.

அண்ணா மீது அமர்ந்து இருக்கும் காக்கா போன்றவன் தி.மு.க உள்ளது.

அண்ணா வழியை பின்பற்றுகிறோம் என்று தி.மு.க வை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தி.மு.க மீது இருக்கும் என்றும் திராவிட சித்தாத்தின் மீது இருக்கும் இருப்பாக மாறி உள்ளது.

வரும் சட்டமன்ற தேர்தலில் தெரியும். தி.மு.க அமைச்சர்களை ஒரு அறையும் வைத்து அவரிடம் அண்ணா குறித்து பத்து கேள்விகளுக்கு பதில் அளிக்க கூறினால் அவர்களுக்கு எதுவும் தெரியாது..

2024 பாராளுமன்றத் தேர்தல் அவர்களுக்கு ஒரு அறிகுறி தான். முன்பு 56 சதவீதமாக இருந்த வாக்கு அவர்களுக்கு 41 சதவீதமாக குறைந்து உள்ளது. உடைந்த கண்ணாடியில் பட்ஜெட் போட்டு அவர்கள் முகத்தில் பார்க்கிறார்கள்.

அடிமைக் கட்சி என்பது எது. ? காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டே விஜய்யை பார்த்து பேசினேன் என்று கூறுபவரை, தமிழக காங்கிரஸ் தலைவரால் சஸ்பெண்ட் செய்ய முடியவில்லை. அதற்கும் அவர் டெல்லிக்கு கடிதம் எழுதி உள்ளேன் என்று கூறுகிறார். இதுதான் அடிமை கட்சி. எதிராக பேசுபவரை கூட அவரால் சஸ்பெண்ட் செய்ய முடியவில்லை.

தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை பொறுத்த வரை, அவரிடம் இன்ஜின் இருப்பதாக தெரியவில்லை. எங்களிடம் 2 டபுள் இன்ஜின் இருக்கிறது. அவரது இன்ஜினில் ஆயில் இருக்கிறதா ? வண்டி இல்லை சேஸ் இல்லை, பெட்ரோல் இல்லை, டீசல் இல்லை, அதை ஸ்டார்ட் செய்வதற்கு ஆட்கள் இல்லை.

இவர்களெல்லாம் பாரதிய ஜனதா கட்சியை பார்த்து ட்ப்பா என்ஜின் என்று கூறுகிறார்கள். பாத்ரூமில் பொதுக்கள் இடத்தில் முகத்தை மூடிக்கொண்டு இருக்கு கூடிய கட்சி போன்று தி.மு.க மாறி போய்விட்டது.

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு அல்வா கொடுத்து விட்டதாக கூறுகிறார்.

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு தரிகட்டுப் போய்விட்டது. 5 ஆண்டுகளில் அவர்கள் எதுவுமே செய்யவில்லை அவர்கள் தான் அல்லா கொடுத்து உள்ளார்கள் .

தமிழகத்தில் அ.தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலில் சந்திக்க உள்ளது.. தலைவர்கள் பிரச்சாரத்தில் இறங்கி விட்டார்கள். எங்கள் கட்சி தொண்டர்களும் வீதி, வீதியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளார்கள்..
ஆனால் விஜய் மக்கள் கைதட்ட வேண்டும், விசில் அடிக்க வேண்டும், ஆரவாரம் செய்ய வேண்டும் என்பதற்காக பேசுகிறார். உங்களை சந்திக்க வைக்க விஜய் முயல வேண்டும். நான் எதற்காக கட்சியை தொடங்கினேன். இதுவரை தமிழ்நாட்டிற்கு செய்யாத எதை நீங்கள் செய்யப் போகிறீர்கள் ? என்பதை கூற வேண்டும்.
எனவே தமிழ்நாட்டுகளை சிந்திக்க வைப்பதாக இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தமிழ்நாடு முழுவதும் சென்று உறவினருடன் சென்று பொதுமக்களிடம் கருத்துக்களை கருத்து பேட்டி மூலம் பெற்று வருகிறார்கள். இது குறித்து தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்ட குழுவினர் பார்த்து கொள்வார்கள்.

தேர்தல் அறிக்கையில் அனைத்து விஷயங்களுக்கும் பதில் கிடைக்கும்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராகுல் காந்தி பேசியது பச்சை பொய். பத்திரிகைகளில் எழுதுவதற்கு எல்லாம் பதில் சொல்லிக் கொண்டு இருந்தால் அதற்கு மட்டும் தான் பதில் வர முடியும்.

சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடுவேனா என்பது குறித்து எனது தந்தை உடல்நிலை குறித்து நான் பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே அடிப்படை வேலைகள் பார்ப்பதற்கான சாத்திய கூறுகள் இல்லை.
பாரதிய ஜனதா கட்சி பிரச்சாரத்திற்கு தயாராக உள்ளேன். நான் இதுகுறித்து மாநில தலைவர் நைனா நாகேந்திரன் மற்றும் மூத நிர்வாகிகளுடன் பேசி உள்ளேன்.
இப்போதைக்கு அதிகம் என்னால் பயணம் செய்ய முடியாத நிலை உள்ளது. சிங்காநல்லூர் வேறு ஒரு பொறுப்பாளரை கட்சி தலைமை நியமிக்கும்.

சட்டமன்றத் தேர்தலில் அஞ்சலிப்பீர்களா டெல்லி செல்வீர்களா ? என்றால் எனக்கு எதுவும் தெரியாது கட்சி தலைமை என்ன சொல்கிறது அதை செய்வேன்.

இந்த பகுதியில் தற்போது சிட்டிங் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் உள்ளார். தொடர்ந்து அவர் வெற்றி பெற்று செல்ல வேண்டும்..

அதேபோன்று இந்த கோவை மாவட்டத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற்று அதிக மெஜாரிட்டியுடன் சட்டசபைக்கு செல்ல வேண்டும். அதற்கு நாங்கள் பாடுபடுவோம்.

போலீஸ் அறிக்கை எஸ்.பி பட்சை பொய் என்கிறார். எம்.எல்.ஏ வை காப்பற்ற. முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறார்.. அமைச்சர் எனக்கு தெரியாது என்று கூறுகிறார்.. கரூரில் 41 பேர் இறந்தனர்.. இது குறித்து சட்டசபை தேர்தலில் மக்கள் பதில் அளிப்பார்கள்…. திருப்பரங்குன்றம் விஷயத்தில் கலெக்டர் மன்னிப்பு கேட்டது போதாது…

நான் ஐ.பி.எஸ் ஆபீஸர் ஆகவே இருந்து இருக்கலாம் என்று நான் கூறவில்லை. நான் ஒற்றைப் பெண் குயினாக இருப்பதில் தவறில்லை.