மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆனையூரில் அமைந்துள்ளது நூற்றாண்டு பழமை வாய்ந்த மீனாட்சியம்மன் சமேத ஐராவதேஸ்வரர் திருக்கோவில்.,

இன்று ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அன்னாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.,
31 கிலோ அன்னம் மற்றும் காய்கறிகளை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன., மீனாட்சியம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.,

இந்த அன்னாபிஷேக பூஜையில் உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமபுற பகுதிகளிலிருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்., அனைவருக்கும் கோவில் சார்பில் அன்னதானமும் பிரசாதமாக வழங்கப்பட்டது.,













; ?>)
; ?>)
; ?>)