• Sun. Oct 6th, 2024

தேனி பெரியகுளத்தில் கௌமாரியம்மன் திருக்கோவில் ஆனிப் பெருந்திருவிழா..

Byvignesh.P

Jul 13, 2022

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோவில் ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

தேனி மாவட்டம் பெரியகுளம் வராக நதியின் தென்கரையில் அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. ஐநூறு ஆண்டுகளுக்கு மேல் மிகப் பழமையான திருக்கோவில் பெரியகுளத்தின் கிராம கோவிலாக கருதப்படும். இத்திருக் கோவிலில் வருடம் தோறும் ஆனி மாதத்தில் ஆனிப் பெரும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இத்திருவிழாவினை முன்னிட்டு கோவிலில் கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வினை முன்னிட்டு கோவிலில் இருந்து கொடியுடன் ஊர்வலத்துடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக அருள்மிகு கௌமாரியம்மன் கோவில் அடைந்தது. பின்னர் சிங்கம் முகம் பதித்த கொடிக் கம்பத்திற்கு பால், தயிர், திருமஞ்சனம், பன்னீர், இளநீர் போன்ற அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்ற பின் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.

அதனை தொடர்ந்து இன்றிலிருந்து சாமி சிம்ம வாகனம், ரிஷப வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் திருவீதி உலா வரும். தொடர்ந்து நடைபெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வருகின்ற 19ஆம் தேதி மாவிளக்கு மற்றும் 20ஆம் தேதி புதன்கிழமை அன்று பக்தர்கள் தீச்சட்டி எடுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். அதன் பின்னர் வருகின்ற 26ஆம் தேதி மறுபூஜை விழாவினை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து கோவிலுக்கு வந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து திருவிழா நிறைவு வரும். கொடியேற்றுதல் நிகழ்வினை முன்னிட்டு பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *