• Mon. Dec 15th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அங்கன்வாடி ஊழியரின் மகனுக்கு ஃபேஸ்புக்கில் வேலை

Byகாயத்ரி

Jun 28, 2022

கூகுள் மற்றும் அமேசான் நிறுவனத்தில் கிடைத்த வாய்ப்பை நிராகரித்த கொல்கத்தாவைச் சேர்ந்த அங்கான்வாடி ஊழியரின் மகன் ஃபேஸ்புக் நிறுவனத்தில் கிடைத்த வாய்ப்பை ஏற்றுள்ளார். இவருக்கு ஆண்டுக்கு ரூ.1.80 கோடி ஊதியம் தரப்படஉள்ளது.

கொல்கத்தா ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் படித்த பைசக் மொந்தல் என்ற மாணவருக்குத்தான் ஃபேஸ்புக்கில் வாய்ப்புக் கிடைத்தது. அமேசானிலும், கூகுளிலும் வாய்ப்புக் கிடைத்தபோதிலும், பேஸ்புக் வாய்ப்புக்காக காத்திருந்து சேர்ந்துள்ளார். எதற்காகத்தெரியுமா, அமேசான், கூகுளைவிட, ஃபேஸ்புக்கில் ஊதியம் அதிகம். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் பைசக் மொந்தல் இன்னும் தனது படிப்பைக்கூட முடிகவில்லை. தற்போது கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பொறியியலில் 4-வது ஆண்டு படித்து வருகிறார்.

பைசக் மொந்தல் ஆங்கில இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் “ செப்டம்பர் மாதம் ஃபேஸ்புக் நிறுவனத்தில் சேரப்போகிறேன். இந்த வாய்ப்பை ஏற்கும் முன் எனக்கு கூகுள், அமேசானில் அழைப்பு வந்தது. ஆனால், நான் ஃபேஸ்புக் நிறுவன்தைத்தான் தேர்ந்தெடுத்தேன். இந்த நிறுவனத்தில்தான் ஊதியம்அதிகம். செப்டம்பரில் லண்டன் செல்ல இருக்கிறேன். கடந்த செவ்வாய்கிழமை அழைப்பு வந்தது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பல நிறுவனங்களில் பயிற்சி ஊழியராக இருந்தேன். அந்த அனுபவம் எனக்கு துணையாக இருந்தது, படிப்புக்கும் உதவியது. நேர்முகத் தேர்வில் தேர்ச்சிபெறவும் இந்த அனுபவம் உதவியது” எனத் தெரிவித்தார்.

மே.வங்கத்தின் பிர்பும் மாவட்டத்தில் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர் மொந்தல். இவரின் தாய் ஷிபானி அங்கன்வாடியில் பணியாற்றி வருகிறார். ஷிபானி கூறுகையில் “ ஃபேஸ்புக்கில் என் மகனுக்கு வேலைகிடைத்தது எங்களுக்குப் பெருமை. என் மகன் எப்போதுமே சிறப்பாக படிக்கக்கூடியவர்” எனத் தெரிவித்தார். ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் ப்ளேஸ்மென்ட் அதிகாரி சமிதா பட்டாச்சார்யா கூறுகையில் “ கொரோனா பெருந்தொற்றுக்குப்பின், மாணவர்களுக்கு ஏராளமான அளவில் சர்வதேச நிறுவனங்களில் இருந்து பணிவாய்ப்பு வருகிறது” எனத் தெரிவித்தார். இந்தப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 9 மாணவர்களுக்கு கடந்த ஆண்டு வெளிநாட்டு நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.ஒரு கோடிக்கும் அதிகமான ஊதியத்தில் வேலை கிடைத்துள்ளது.