அங்கன்வாடி மையத்தில் வித்தியாசமான முயற்சியில் அங்கன்வாடி சிறார்களுக்கு தலைமை பண்பை நூதன முறையில் எடுத்துரைத்து அங்கன்வாடி ஆசிரியை பெற்றோரின் பாராட்டைப் பெற்றார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சங்கரலிங்கபுரம் அங்கன்வாடியில் பயிலும் சிறார்களுக்கு தலைமை பண்பு குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்
நமது நண்பர்கள் பாடத்திட்டத்தின் கீழ் சிறுவர், சிறுமியருக்கு முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர், காவல்துறை, மருத்துவர், விவசாயி, ராணுவ வீரர், ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு வேண்டமணித்து அவர்களின் செயல்பாடுகள் குறித்தும், தலைமை பண்பு குறித்தும் ஆசிரியை ஜெய்லானி எடுத்துரைத்தார்.
மேலும் சிறார்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் சிறுவர், சிறுமியருடன் அந்தந்த வருடங்களுக்கு ஏற்ப பாடல்கள் பாடியும், நடனமாடியும் தலைமை பண்பை எடுத்துரைத்த நிகழ்வு பெற்றோரை நெகிழ்ச்சி அடைய செய்தது.








