• Fri. Dec 13th, 2024

ஆண்ட்ரியாவின் நிர்வாணக் காட்சிகள் பிசாசு – 2 ல் நீக்கம்?

2014-ம் ஆண்டு இயக்குநர் மிஷ்கின் இயக்கிய படம் ‘பிசாசு’. இந்தப் படத்தின் 2-ம் பாகத்தை தற்போது மிஷ்கின் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை வேடத்தில் நடிக்க அவருடன் பூர்ணா, அஜ்மல், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விஜய் சேதுபதி இப்படத்தில் கெளரவத் தோற்றத்தில்நடித்துள்ளார்.
இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று மூன்று மொழிகளிலும் வெளியாகவுள்ளது.‘பிசாசு- 2’ படத்தில் நடிகை ஆண்ட்ரியா சில காட்சிகளில் முழு நிர்வாணமாக நடித்துள்ளார். இந்தக் காட்சிகள் படத்தில் 15 நிமிடங்கள் இடம் பெற்றுள்ளன. இந்தக் காட்சிகள் படத்தின் கதைக்கு மிகவும் தேவையாய் இருந்ததால் தான் அப்படி நடித்ததாக நடிகை ஆண்ட்ரியா பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இதற்காக கூடுதலான சம்பளத்தையும் ஆண்ட்ரியா பெற்றிருந்தார். இந்தத் தகவலே இந்தப் படம் பற்றிய பெரும் எதிர்பார்ப்புக்கு காரணமாக அமைந்துவிட்டது.இந்த நிலையில் திடீரென்று அந்த நிர்வாணக் காட்சிகள் முழுவதையும் படத்தில் இருந்து நீக்கிவிட்டதாக இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது
“இந்த ‘பிசாசு- 2’ படத்தை குழந்தைகளுக்காகவே எடுத்து இருக்கிறேன். ஆனால், இந்த நிர்வாண காட்சிகளால் குழந்தைகள் படத்தைப் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாகவே ஆண்ட்ரியா நடித்த 15 நிமிட நிர்வாண காட்சிகளை படத்தில் இருந்து நீக்கிவிட்டேன்..” என்று சொல்லியிருக்கிறார் மிஷ்கின்.
படத்திற்கு இருந்த மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஒரேயொரு பேட்டியில் இப்படி படத்தின் இயக்குநரே உடைத்துவிட்டதை எண்ணி தமிழ்த் திரையுலகப் பிரமுகர்கள் பலரும் ஆச்சரியப்பட்டுள்ளனர்.