• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் உயிரிழப்பு….

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழப்பு
சேலம் அம்மாபேட்டை பெரிய கிணறு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி இவருக்கு யசோதா என்ற மனைவியும் ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர் இந்த நிலையில் சுப்பிரமணி வலசையூர் பகுதியில் 900 சதுர அடி நிலம் தனது மனைவி யசோதா பெயரில் வாங்கி உள்ளார். இதன் பின்னர் கணவன் மனைவி குடும்ப பிரச்சினை காரணமாக பிரிந்து வாழ்ந்துள்ளனர். கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த சுப்ரமணி நிலத்தில் பங்கு கேட்டு பிரிந்த மனைவி யசோதாவிடம் கேட்டுள்ளார். அப்போது தகராறு ஏற்பட்டுள்ளது .

மேலும் யசோதா மகன் அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது .இந்த நிலையில் நிலத்தில் பங்கு தர நடவடிக்கை எடுக்க கோரி நேற்று திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனையடுத்து காவல்துறையினர் அவரது உடலில் தண்ணீர் ஊற்றி சமாதான பேச்சு வார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர் அப்போது அவருக்கு குளிர் அதிகம் ஏற்படவே சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது இந்த நிலையில் இன்று காலை சுப்பிரமணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து அம்மாபேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
நிலத்தில் பங்கு கேட்டு ஆட்சியர் அலுவலகம் அருகே மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி ஈடுபட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது