சிவகங்கையில் ரூ1.85 கோடியில் நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையம் திறந்தது
போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கிறது . முதல்வர்க்கும், நகர்மன்ற தலைவருக்கும் நன்றி தெரிவித்து டி.என்.பி.சி யில் வெற்றி பெற்றவர்கள் பேட்டி அளித்தனர்.
சிவகங்கை நகராட்சியில் நகர்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.85 கோடி மதிப்பில் அதிநவீன வசதிகளுடன் கூடிய நுாலகம் மற்றும் அறிவு சார் மையம் கடந்த ஓராண்டுக்கு முன்பு திறக்கப்பட்டது. இதில் படித்து கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற டிஎன்பிசி தேர்வில் இந்த மையத்தில் பயிற்சி பெற்ற ஞானசேகரன் சூர்யா, கேசவன் கிரசன்சியா, பரமேஸ்வரி ஐந்து பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்கள் இன்று தாங்கள் வெற்றி பெற அனைத்து வசதிகளும் செய்து தந்த தமிழக முதல்வருக்கும் சிவகங்கை நகர மன்ற தலைவர் துரை ஆனந்த் அவர்களுக்கும் சிவகங்கை நகராட்சி அலுவலகத்திற்கு சென்று நன்றி தெரிவித்தனர்.
சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அறிவு சார் மையத்தில் காலை முதல் மாலை வரை நாள் தோறும் 100 க்கும் மேற்பட்டோர் வந்து போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிறார்கள். அவர்களில் சிலர் வெற்றி பெற்று அரசு பணிகளுக்கு செல்கின்றனர். மற்றவர்கள் தொடர் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்களுக்கு வழிகாட்டுதலுடன் கூடிய பயிற்சி வழங்குவதற்கு சிவகங்கை நகராட்சி ஒரு சிறப்பான முயற்சியை முன்னெடுத்துள்ளது.
வாசிப்பு அறை, ‘ஸ்மாா்ட்’ வகுப்பறை, இணையதள வசதிகளுடன் கூடிய கணினி மையம், நூலகா் அறை, கண்காணிப்புக் கேமரா கட்டுப்பாட்டு அறை, போட்டித் தேர்வுக்கு தேவையான அனைத்து வகையான புத்தகங்கள் கொண்ட இருப்பு அறைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி, கண்காணிப்புக் கேமராக்கள், எல்.சி.டி. தொலைக்காட்சி, புரொஜெக்டா் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
அடிப்படை வசதிகளை நகர மன்ற தலைவர் துரை ஆனந்த், ஆணையாளர் அவ்வபோது சென்று ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளும் எடுத்து வருகிறார்கள்.

இந்த அறிவுசார் மையத்தில், `யூபிஎஸ்சி (UPSC), டிஎன்பிஎஸ்சி (TNPSC) டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, வங்கித்தேர்வு நிறுவனம், ஆர்ஆர்பி ஆகிய போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கு சிறந்த போட்டித் தேர்வு பயிற்சியாளர்கள், வெற்றியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு பணிகளுக்கு சென்றவர்களை அழைத்து வந்தும் பயிற்சியும், வழிகாட்டுதலும் வழங்கப்படுகிறது.
”கல்லூரி படிப்பு முடிக்கும் இளைஞர்களுக்கு அரசு பணி என்பது ஒரு பெரும் கனவாக உள்ளது. அந்த கனவு நிறைவேற, வசதிப் படைத்தவர்கள், தனியார் போட்டித்தேர்வு பயிற்சி மையங்களுக்கு சென்று தயாராகிறார்கள். வசதியில்லாத பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் சிவகங்கை அறிவுசார் மையத்தில் பயிற்சி மேற் கொள்கின்றனர்.
இந்த மையத்தில் படித்து வெற்றி பெற்ற ஐந்து பேர் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கும் வசதிகளை ஏற்படுத்தி தந்த நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.

.