• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டி அருகே மூதாட்டி கிணற்றில் உடல் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம்

ByP.Thangapandi

Jun 18, 2024

உசிலம்பட்டி அருகே காணாமல் தேடி வந்த மூதாட்டி கிணற்றில் உடல் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது – தவறி கிணற்றில் விழுந்தாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேக்கிலார்பட்டியைச் சேர்ந்தவர் அய்யர்த்தேவர் மனைவி செல்லம்மாள்.

மகன், மகள்களை திருமணம் முடித்து பேரன், பேத்திகளை கண்ட இந்த மூதாட்டி தனது பூர்வீக வீட்டில் தனியாக வசித்து வந்தாகவும், கணவர் மற்றும் மகன் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பாகவே இறந்துவிட, அதே ஊரில் உள்ள மகள்களின் வீடுகளில் உணவருந்தி வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு முதல் மகள்களின் வீட்டிற்கு வழக்கம் போல உணவு அருந்த வராத தாயை மகள்கள் அக்கம், பக்கத்தில் தேடியுள்ளனர்.

அதே ஊரைச் சேர்ந்த பழனி என்பவரது தோட்டத்தில் உள்ள 40 அடி கிணற்றில் உடல் அழுகிய நிலையில் செல்லம்மாள் பிணமாக கிடப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இந்த தகவலின் பேரில் உசிலம்பட்டி தீயணைப்புத்துறை மற்றும் உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய போலீசார் கிணற்றிலிருந்து மூதாட்டி செல்லம்மாளின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு மீதாட்டி கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டது குறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் வயது மூப்பின் காரணமாக கிணற்றின் அருகே சென்ற போது தவறி கிணற்றில் விழுந்தாரா, வேறு ஏதும் காரணமாக என போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.