• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நீலகிரி- மேல்குந்தா பகுதியில் குறுகிய பாலத்தால் தொடரும் விபத்து

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கிண்ணக்கொரை சாலையான மேல்குந்தா புளிசோலை பகுதியில் வனப்பகுதியை ஒட்டி உள்ள வளைவுகளுடன் கூடிய குறுகிய பாலம் வாகனங்கள் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருகின்றது.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கிண்ணக்கொரை சாலையில் மிகவும் குறுகளாகவும் பெரிய வளைவைக் கொண்டும் உள்ளதால் வேகமாக வரக்கூடிய வாகனங்கள் சுற்றுலா வாகனங்கள் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி கட்டுப்பாட்டுகளை இழந்து விபத்து ஏற்பட்டு வருகின்றன.


மஞ்சூர் வழியாக அதிக அளவில் சுற்றுலா வாகனங்கள் கிண்ணக்கொரை அப்பர் பவானி கோரகுந்தா இரிய சிகை போன்ற பகுதிகளுக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன இரவு நேரங்களில் வனப்பகுதிகளை ஒட்டி உள்ளதால் வனவிலங்குகளும் சாலையில் மேச்சலில் ஈடுபட்டு வருகிறது பேருந்துகள் நீளமாக உள்ள பேருந்துகள் அவ்வழியாக இயக்கப்படுவதால் குறுகிய பாலத்தை கடப்பதற்கு ஓட்டுநர்கள் சிரமப்பட்டு இயக்கி வருகின்றனர் பாலத்தின் சுவர்கள் வாகனங்கள் இடித்ததால் சேதம் அடைந்தும் பல வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளதால் பழுது ஏற்பட்டும் அருவிகளில் நீர் வரத்து அதிகரிக்கும் பொழுது பாலத்தைத் தாண்டி நீர் சென்று வருகிறது பாலத்தின் அடியில் அடித்து வரப்பட்ட மரம் செடி கொடிகள் மூடி பாலம் சேதமடைந்து விழும நிலையில் உள்ளதால் உடனடியாக அப்பாலத்தினை இடித்து புதிய பாலம் அமைத்து தர வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதால் அப்பகுதி பொதுமக்கள் மூலமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் சிவப்பு கொடிகளை கட்டி வைக்கப்பட்டுள்ளனர்.