விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட மத்திய கழகம் சார்பில் கிளை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார் .மாநில மகளிர் அணி இணை செயலாளர் கவிதா தனசேகரன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக விருதுநகர் மாவட்ட மத்திய அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் சந்தோஷ் குமார் கலந்து கொண்டார். கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை கூறிக் கொண்டிருந்தவர் கூட்டத்தில் நிர்வாகிகள் குறைவாக உள்ளாகளே என்ன காரணம் என கேட்டார் .அப்போது மாநில மகளிர் அணி இணைசெயலாளர் கவிதா தனசேகரன் ஒன்றிய செயலாளர் நிர்வாகிகளுக்கு முறையான தகவல் தெரிவிப்பதில்லை அதனால் ஏராளமான நிர்வாகிகள் கூட்டத்திற்கு வராமல் புறக்கணித்துள்ளனர் என கூறினார்.
ஒன்றிய செயலாளர் செல்வம் தான் அனைவருக்கும் கூட்டம் குறித்து தகவல் தெரிவித்ததாக கூறினார். ஆனால் மகளிர் அணி நிர்வாகிகளுக்கு கூட்டம் ஆரம்பிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தெரிவித்ததாக கூறினார்கள். இதனால் மாவட்ட செயலாளர் சந்தோஷ் குமார் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வத்திடம் நிர்வாகிகளுக்கு முறையான தகவல் தெரிவிக்க வேண்டும். அனைவரிடம் இணக்கமாக பணி புரிய வேண்டும் என கூறினார். இதனால் ஆலோசனை கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.