• Mon. Jan 5th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மஞ்சூர் கோவிலில் அம்மன் தாலி திருட்டு -காவல்துறை விசாரணை

நீலகிரிமாவட்டம் மஞ்சூரில் கோயிலில் அம்மன் தாலி திருடபட்டுள்ள நிலையில் காவல்துறையின் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த அண்ணாமலை காமராஜ் நகர் பகுதியில் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. காமராஜ் நகர் பகுதியில் பட்டத்தரசி அம்மன் கோவில் ஒன்று உள்ளது இந்த கோவிலில் வழக்கம்போல் பொதுமக்கள் காலை 7 மணி அளவில் சாமி கும்பிடுவதற்காக வந்துள்ளார்.

அப்போது கோவிலில் கதவு உடைக்கப்பட்ட நிலையில் பட்டத்தரசி அம்மன் கழுத்தில் இருந்த தங்கத்திலான தாலி திருடுபட்டுள்ளதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர் . உடனடியாக. மஞ்சூர் காவல் நிலையத்திற்கும் குண்ட வட்டாட்சியருக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த மஞ்சூர் காவல் நிலையம் ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் குந்தா வட்டாட்சியர் அலுவலக வருவாய் ஆய்வாளர் மணிமேகலை கிராம நிர்வாக அலுவலர் தினேஷ் குமார் உதவி நிர்வாக அலுவலர் சிவசங்கரன் நேரில் சென்று ஆய்வு செய்தனர். காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது