• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா அனுப்பிய போர் கப்பல்..!

Byவிஷா

Oct 11, 2023
இஸ்ரேலுக்கு ஆதரவாக கிழக்கு மத்திய தரைக்கடலுக்கு விமானம் தாங்கி கப்பலை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலில், “அமெரிக்காவின் போர்டு கேரியர் கடற்படை குழு இஸ்ரேல் செல்ல உத்தரவிடப்பட்டு உள்ளதுடன், அந்த போர் விமான கப்பலில் 5 ஆயிரம் வீரர்கள் உள்ளதுடன், இதில் பலவகை அரிய விமானங்கள் காணப்படுகின்றன.
இந்த கப்பலில் உள்ள போர் விமானங்கள் எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்கும் திறன் வாய்ந்தவை என்பதுடன், பயங்கரவாதிகளுக்கு கூடுதல் ஆயுதங்களை வழங்குபவர்கள் மீது ஒரு கண் வைத்திருக்கும் வகையில் தொழிநுட்பத் திறன் கொண்டவையாகும். 
வர்ஜீனியாவை தளமாகக்கொண்ட இந்த விமானம் தாங்கி கப்பல் தற்போது மத்திய தரைக்கடலில் இருந்து இஸ்ரேல் நோக்கி விரைந்துள்ளதுடன், இதில் யுஎஸ்எஸ் நார்மண்டி, யுஎஸ்எஸ் தாமஸ் ஹட்னர், யுஎஸ்எஸ் ராம்பேஜ், யுஎஸ்எஸ் கார்னி, யுஎஸ்எஸ் ரூஸ்வெல்ட் மற்றும் எப்-35, ஏபி-15, எப்-16 மற்றும் ஏ-10 போர் விமானங்கள் தயார் நிலையில் உள்ளன.” என்று கூறப்பட்டுள்ளது.

மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள இந்த கப்பல் இஸ்ரேல் சென்றதும் பயங்கரவாதிகளுக்கு பேரழிவு ஏற்படும் என கூறப்படுகிறது.