• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

அமேசானில் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு

ByA.Tamilselvan

Nov 15, 2022

பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் செலவினங்களைக் குறைப்பதற்காக 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தயாராகி வருவதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அமேசான் வட்டாரங்கள் தெரிவிப்பதுபோல் 10 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டால் அது அமேசான் வரலாற்றில் மிகப்பெரிய லே ஆஃப் நடவடிக்கையாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. அமேசான் மொத்த ஊழியர்களில் இது 1 சதவீதத்தை நெருங்கும் என்று கூறப்படுகிறது. அமேசான் நிறுவனத்தில் தற்போது உலகம் முழுவதும் 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணி புரிகின்றனர்.
அமேசானின் லாபமற்ற சில துறைகளுக்கு இது தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை தெரிவித்துள்ளது. பொதுவாக விழாக் காலங்கள், விடுமுறை காலங்கள் தான் அமேசான் இ காமர்ஸ் நிறுவனத்தின் விற்பனை இலக்கு. ஆனால் இந்த ஆண்டு இந்த காலங்களில் எதிர்பார்த்த அளவு விற்பனை இல்லை என்று கூறப்படுகிறது. காரணம், விலைவாசி உயர்வால் நுகர்வோர் மற்றும் வர்த்தகர்கள் கையில் பணப்புழக்கம் இல்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.