• Wed. Jul 16th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

வியக்கவைக்கும் குதிரையேற்ற சாகசங்கள்..,

BySeenu

Jul 6, 2025

கோவையில் தேசிய அளவிலான ‘இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக்’ எனும் மாபெரும் குதிரையேற்ற போட்டி நேற்று துவங்கியது. இக்வைன் ஸ்போர்ட்ஸ் இந்தியா கூட்டமைப்பு மற்றும் இண்டிஜீனஸ் ஹார்ஸ் சொசைட்டி, தமிழ் நாடு ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தும் இந்த மிகப்பெரும் குதிரை தடை தாண்டும் போட்டியின் துவக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

லீக் போட்டிகள் சனி மற்றும் ஞாயிறு 2 நாட்கள் வெள்ளானைப்பட்டி-யை அடுத்த மோளப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ‘தி இக்வெஸ்ட்ரியன் க்ரஸ்ட்’ வளாகத்தின் அருகே உருவாக்கப்பட்ட பிரத்தியேக மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்தியாவின் 6 மாநிலங்களில் இருந்து இந்த மிகப்பெரும் குதிரை தடை தாண்டும் போட்டியில் கலந்து கொள்கின்றனர். அவை சென்னை புல்ஸ் (தமிழ் நாடு), பெகாசஸ் ஸ்போர்ட்ஸ் (கேரளா), பெங்களூரு நைட்ஸ் (கர்நாடகா), கோல்கொண்டா சார்ஜ்ர்ஸ் (தெலுங்கானா), குவாண்டம் ரெய்ன்ஸ் (கோவா) மற்றும் எலீட் இக்வெஸ்ட்ரியன்ஸ் (மேற்கு வங்காளம்) ஆகும்.

இந்த நிகழ்வில் நடைபெறும் குதிரை தடை தாண்டுதல் போட்டிகள், 110 சென்டிமீட்டர் மற்றும் 120 சென்டிமீட்டர் என 2 பிரிவுகளாக நடைபெறுகின்றன.

சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வுகளில் அனைத்து அணிகளின் வீரர்களும் குதிரை தடை தாண்டுதலின் முதல் சுற்றில் உற்சாகமாக தங்கள் குதிரைகளுடன் பங்கேற்றனர்.

நாளை இப்போட்டிகளின் இறுதி நாள். இதன் பின்னர் வெற்றியாளர்களுக்கு விருதுகள் வழங்கும் நடைபெறும்.

இண்டிஜீனஸ் ஹார்ஸ் சொசைட்டி, தமிழ் நாடு-வின் தலைவர் திரு.A.S. சக்தி பாலாஜி மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினர்.

நாள் 1 – முதல் சுற்று (110 செ.மீ.) முடிவுகள்

  1. துருவ்ராஜ் சிங் வகேலா (குவாண்டம் ரெயின்ஸ்) – கோவா – 15.03 வினாடிகள்
  2. வேத் சர்கார் ( எலீட் இக்வெஸ்ட்ரியன்ஸ்) – மேற்கு வங்காளம் – 15.53 வினாடிகள்
  3. சூர்யா – (சென்னை புல்ஸ்) – தமிழ் நாடு – 16.22 வினாடிகள்
  4. ஆராதனா – (சென்னை புல்ஸ்) – தமிழ் நாடு – 16.24 வினாடிகள்
  5. அமர சிங் – (குவாண்டம் ரெயின்ஸ்) – கோவா – 16.53 வினாடிகள்
  6. யுவன் – கோல்கொண்டா சார்ஜ்ர்ஸ் (தெலுங்கானா) – 16.83 வினாடிகள்.