• Sat. Jan 3rd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அமலா பாலின் வைரலாகும் ’கடவேர்’ போஸ்டர்…

அமலா பால் நடிப்பில் உருவாகிவரும் ’கடவேர்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லூக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அமலா பால் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகிவரும் கிரைம் த்ரில்லர் திரைப்படம் ’கடவேர்’. மலையாள இயக்குநர்களான அனூப் பனிக்கர் மற்றும் அபிலாஷ் பிள்ளை ஆகியோர் இயக்கும் இத்திரைப்படம் மார்ச் 25ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்தியாவிலேயே முதன்முறையாக உருவாகிவரும் தடவியல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் இதுதான் என்று கூறப்படுகிறது. இதில் அமலா பால் டாக்டர் பத்ரா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடைய தனித்துவமான திறன்கள் ஒரு வழக்கை தீர்க்க எவ்வாறு உதவுகிறது என்பதை மையமாகக் கொண்டு இந்த படம் நகர்வதாகக் கூறப்படுகிறது.

கடவேர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இதில் போஸ்டரில் சுற்றிலும் பிணங்கள் கிடக்கும் அறையில் அமர்ந்து கொண்டு அமலாபால் உணவு உண்டு கொண்டிருக்கிறார். ஏற்கனவே, அமலா பால் நடிப்பில் வெளியாகி இருந்த ஆடை படத்தின் போஸ்டர் வெளியிடும் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.