• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

“நான் என்ன கொலைகாரனா இல்லை கொள்ளைக்காரனா?” – நடிகர் அஜித் கேள்வி

ByA.Tamilselvan

Sep 18, 2022

தனது ரசிகர்களுடன் பேசும் போது “நான் என்ன கொலைகாரனா இல்லை கொள்ளைக்காரனா?” என கேள்வி எழுப்பியுள்ளார் நடிகர் அஜித்
அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஏ.கே. 61’ படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்புகளுக்கு இடையில் அஜித் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அஜித் சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து விமானம் மூலம் லடாக் சென்று, அங்கிருந்து இமயமலை பகுதிகளில் பைக்கில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இயற்கை காட்சிகளை ரசித்தபடி செல்லும் அவரது பைக் சாகச பயண புகைப்படங்கள் அவ்வப்போது வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
அஜித் இந்நிலையில் நடிகர் அஜித் ரசிகர்களுடன் ஜாலியாக உரையாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. அதில், அஜித்தை சந்திப்பதற்காக தேடி வரும் அவரது ரசிகர்கள், “உங்களை மூணு நாளா தேடிட்டு இருக்கோம் சார்..” என்று கூற, உடனே அஜித், “தேடிட்டு இருக்கிங்களா… நா என்ன கொள்ளைக்காரனா இல்ல கொலைகாரனா” என்று சிரித்தபடி கேட்டார். ரசிகர்களுடன் உரையாடும் அஜித் அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல சார்… உங்களை எப்படியாவது பாக்கணும்னு ஆசையாய் சொல்ல, அதன் பிறகு அஜித் அவர்களின் விபரங்களை கேட்டு நலம் விசாரிக்கும் வகையில் அந்த வீடியோ அமைந்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.