• Sat. Apr 11th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு..!

Byகிஷோர்

Oct 14, 2021

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1991 – 1996 ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் ‘செங்காந்தள் நண்பர்கள்’ என்ற அறக்கட்டளை துவங்கி உள்ளனர்.


இந்நிலையில் இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் குடும்பத்தினருடன் சந்திப்பு நடத்தினர். இதில் அவர்களுக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பள்ளிக்குத் தேவையான மேஜை, நாற்காலி உள்ளிட்டவைகளை வழங்கினர்.

மேலும் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு பீரோல், மின்விசிறி உள்ளிட்டவைகளை அன்பளிப்பாக முன்னாள் மாணவர்கள் வழங்கினர்.