• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கேஜிஎஃப் படக்குழுவினரை பாராட்டிய அல்லு அர்ச்சுன்

பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 14ம் தேதி வெளியான ‘கேஜிஎஃப் 2’ படம் ரூ.1100 கோடி வரை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்த படத்தில் நடிகர் யஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ரவீனா டாண்டன் ஜி மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோரும் இப்படத்தில் நடித்து இருந்தார்கள். கேஜிஎஃப் படத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் கேஜிஎஃப் படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.

அவர் கூறியதாவது, கேஜிஎஃப் 2 குழுவினருக்கு வாழ்த்துக்கள். யஷ் வெறித்தனமான நடிப்பு மற்றும் உழைப்பு மூலம் ரசிகர்களை காந்தம் போல ஈர்க்கிறார். சஞ்சய் தத், ரவீனா டாண்டன் ஜி மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். ரவி பாஸ்ரூரின் சிறந்த இசை மற்றும் புவன் கவிதாவின் அற்புதமான காட்சியமைப்பு. அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது மரியாதை. பிரசாந்த் நீல் அவர்களுக்கு எனது மரியாதை. ஒரு சிறப்பான சினிமா அனுபவத்திற்காகவும், இந்திய சினிமாக் கொடியை உயரப் பறக்க வைத்ததற்கும் அனைவருக்கும் நன்றி. கேஜிஎஃப் 2 என்று தெரிவித்துள்ளார்.