• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

பயிற்சி முடிந்த துணை தாசில் தார்களுக்கு பணியிடம் ஒதுக்கீடு… ஆட்சியர் உத்தரவு..,

ByKalamegam Viswanathan

Sep 10, 2023

விருதுநகர் மாவட்டத்தில் துணை தாசில்தார்களுக்கு காவல்துறை பயிற்சிகள் நடைபெற்று முடிந்தது. பயிற்சிகள் முடிந்த நிலையில், துணை தாசில்தார்களுக்கு பணியிடங்களை ஒதுக்கி மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. அலுவலக தலைமை உதவியாளர் இந்திரா, ஆட்சியர் அலுவலக சமூக பாதுகாப்பு திட்ட துணை தாசில்தாராகவும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தில் பணிபுரிந்த சோனையன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக பறக்கும்படை துணை தாசில்தாராகவும், வத்திராயிருப்பு மண்டல துணை தாசில்தார் சசிகுமார் அதே பணியிடத்திலும், திருவில்லிபுத்தூர் மண்டல துணை தாசில்தார் ரவிக்குமார் அதே பணியிடத்திலும், வத்திராயிருப்பு வட்ட வழங்கல் அலுவலர் கலைச்செல்வி அதே பணியிடத்திலும், ஆட்சியர் அலுவலக ஜே பிரிவு தலைமை உதவியாளர் பால்ராஜ், திருச்சுழி வட்ட வழங்கல் அலுவலராகவும், திருவில்லிபுத்தூர் துணை தாசில்தார் ராஜேந்திரன் அதே பணியிடத்திலும், விருதுநகர் தாலுகா மண்டல துணை தாசில்தார் முத்துசங்கரன், திருவில்லிபுத்தூர் வட்ட வழங்கல் அலுவலராகவும், திருவில்லிபுத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் பாலகிருஷ்ணன், மாவட்ட ஆய அலுவலக கண்காணிப்பாளராகவும், திருச்சுழி வட்ட வழங்கல் அலுவலர் தேவமிர்தம், அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. அலுவலக தலைமை உதவியாளராகவும் நியமித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்