• Wed. Dec 31st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கோவை குப்பை மேடாக மாறிவிட்டது என குற்றச்சாட்டு !!

BySeenu

Dec 31, 2025

கோவை மாநகராட்சி அவசர கூட்டம் இன்று நடந்தது. மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் முன்னிலை வகித்தார்..

இதில் 150 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் மாமன்ற கூட்டத்திற்கு வந்த அ.தி.மு.க கவுன்சிலர்கள் பிரபாகரன் ரமேஷ் ஆகியோர் அங்கு திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கைகளில் சாலைகளை சீரமைக்காததை கண்டித்து எழுதிய வாசகங்கள் உடைய பேனர்க ளை கொண்டு வந்து தி.மு.க விற்கு எதிராககோஷம் எழுப்பினர்.

இது குறித்து அ.தி.மு.க
கவுன்சிலர் பிரபாகரன் கூறும்போது:

கோவை மாநகராட்சியில் அவசர கோலத்தில் அவசரக் கூட்டம் நடத்துகிறார்கள்., ஒரு அவசர கூட்டத்தில் ஒரு முக்கியமான ஒரு தீர்மானம் கொண்டு வந்து விவாதிப்பார்கள், ஆனால் நேற்று நடைபெற வேண்டிய சாதாரண கூட்டம் இன்று அவசரக் கூட்டமாக மாற்றி உள்ளனர். அதில் 105 தீர்மானங்கள் கொண்டு வந்து உள்ளனர். தி.மு.க உறுப்பினர்கள் கூட அதை திரும்பி பார்த்து இருக்க மாட்டார்கள் , வெள்ளலூர் குப்பை கிடங்கு வெள்ளலூரில் தொடங்கி செட்டிபாளையம், போத்தனூர், ஆத்துப்பாலம், குனியமுத்தூர் கோவை புதூர் வரை மழைக் காலத்தில் துர்நாற்றம் வீசும் . ஆனால் தற்பொழுது சாதாரணமாக காற்று வீசினால் கூட அதிக அளவு துர்நாற்றம்வீசுகிறது,

கடந்த 2 மாதங்களாக கோவை மாநகராட்சி முழுவதும் ஒட்டுமொத்தமாக செம்மொழி பூங்காவிற்கு, அதில் வருமானம் வருவதால் மட்டும் முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், வெள்ளலூர் குப்பை கிடங்கில் என்ன வரப் போகிறது, என்று அதை பற்றி கவலைப்படாமல் மக்கள் நலனில் அக்கறை செலுத்தாமல் உள்ளனர். இந்த துர்நாற்றம் வீசுவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதைப்பற்றி கவலைப்படாமல் போட்டோ சூட் நடத்திக் கொண்டு உள்ளனர்.

கோவை வாழ் மக்கள் பற்றி கவலை இல்லை என்றும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடை பயிற்சி மேற்கொள்ள காசு இல்லாமல், சென்று வந்த நிலையில், அதனை கண்டு கொள்ளாமல் இன்று ஆகாயத் தாமரை படர்ந்து சமூக விரோத செயல்கள் நடைபெறும் இடமாக ஸ்மார்ட் சிட்டி குளங்கள் மாறி வருகின்றன.
அ.தி.மு.க ஆட்சி காலத்தில் அழகு படித்தி இருந்த மாநகராட்சியை, தி.மு.க வேண்டுமென்று ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை முடக்க வேண்டும் என்று அனைத்தையும் வீணடித்து குப்பைமேடாக காட்சி அளிக்கிறது.

தொழில் தொடங்குவதற்கு வெளிநாட்டில் இருந்து வருவார்கள் என்று பார்த்தால், யாரும் எட்டி கூட பார்க்கவில்லை ஏனென்றால் தொழில் நகரமான கோவையில் சாலைகள் அனைத்தும் சரி வர இல்லாமல், கிழிஞ்ச சட்டைக்கு ஓட்டு போட்டது போன்று இருப்பது போல் உள்ளது.

அனைத்து சாலைகளையும் ஓட்டு போட்டு வைத்து உள்ளனர். வெளிநாட்டில் இருந்து தொழில் தொடங்க யாரும் ? இதனால் வர மாட்டார்கள் என தெரிவித்தனர்.