மேல்மலை கிராமமான கவுஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குறைந்த மின்சாரம் வருவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என கோட்டாட்சியர் தலைமையில் நடந்த கூட்டத்தில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் மேல்மலை கிராமமான மன்னம்மன்னூர், கவுஞ்சி, கிளாவரை ஆகிய 18 மேற்பட்ட கிராமங்கள் உள்ளது .

இக்கிராம மக்களுக்கு விவசாயம் ஒன்று மட்டுமே முக்கிய தொழிலாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இன்று கொடைக்கானலில் கோட்டாட்சியர் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மேல்மலை கிராமப் பகுதிகளில் சரியான மின்சாரம் வழங்கப்படாமல் இருப்பதை குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
மேல்மலை கிராம கவுஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் (low voltage) அரை மின்சாரம் ஆக ஒரு ஆண்டுக்கு மேலாக இருந்து வருகிறது இதைக் குறித்து மின்சார துறையிடம் பலமுறை புகார் அளித்தாலும் மின்வாரியம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது பகுதி மக்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. அதேபோல் கிராம சபை கூட்டத்திற்கு மின்சாரத்துறை அதிகாரிகளும் பணிபுரிபவர்களும் யாரும் வருவதில்லை எனவும் குற்றச்சாட்டு இருந்துள்ளது.
பொதுமக்கள் சார்பாக திண்டுக்கல் DE அவர்களிடம் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் எடுக்கப்பட்டு வருகிறது இதனால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு நீ பாச்ச மோட்டார் இயங்குவதில்லை மேலும் கைபேசி கூட சார் போட முடியாத நிலை அரங்கேறி வருவதாக வீடுகளில் உள்ள மின்சார சாதகங்கள் எதையுமே பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக கூறினர்.
அதைப்போல் அப்பகுதியில் அமைந்துள்ள தங்கும் விடுதிகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து சிங்கிள் பேஸ் மின்சாரத்தை கமர்சியல் பயன்பாட்டுக்கு கொடுக்கப்படுகிறது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இதுபோல் பலமுறை மனுக்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் வைக்கும் பொழுது காவல்துறை சார்பாக தனிநபர் மேல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.




