• Tue. Nov 4th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்..,

ByT. Vinoth Narayanan

May 2, 2025

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் – II (2025-2026) கீழ் அருள்புத்தூர் ஊராட்சியில் கிறிஸ்துராஜபுரம் தெற்கு தெரு, தெற்கு மீனாட்சியாபுரம் பிள்ளையார் கோவில் தெரு, கல்லுப்பட்டியில் காலனி, அருள்புத்தூர் கிராமத்தில் நடுத்தெருக்களில் பேவர் பிளாக் தளம் பதிக்கும் பணிக்கும் ஜமீன் நல்லமங்கலம் ஊராட்சியில் பிள்ளையார் கோவில் தெரு, காயாமொழி நகர், மேலவரகுணராமபுரம் பகுதிகளில் பேவர் பிளாக் தளம் மற்றும் புத்தூர் ஊராட்சியில் இனாம்கோவில்பட்டி எல்லைப்பகுதி, கலம், புத்தூர் காலனி, பசும்பொன் நகர் பகுதிகளில் பேவர் பிளாக் தளம் அமைக்கும் பணிக்கு S.தங்கப்பாண்டியன், எம் எல் ஏ தலைமையில் ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்கள் முன்னிலையில் பூமி பூஜை சிறப்பாக நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மேலவரகுணராமபுரம் கிராமத்தில் முதலமைச்சர் காலை உணவுத்திட்டத்திற்காக மே.நா.நாடார் துவக்கப்பள்ளியில் புதியதாக அமைக்கப்பட்ட சமையற்கூடக்கட்டிடத்தை குழந்தைகளுடன் தங்கப்பாண்டியன் எம் எல் ஏ திறந்து வைத்தார்.

மேலும் தொடர்நிகழ்ச்சிக்கு இடையில் அருள்புத்தூர் கிராமத்தில் பொதுமக்களின் வீடுகளில் அமர்ந்து தேநீர் குடித்து பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.

இந்நிகழ்வில் Ex.சேர்மன் சிங்கராஜ் பொறியாளர் பிரஸ்கான் பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி ஊராட்சி செயலர்கள் கடற்கரை முத்துக்குமார் கருப்பசாமி கிளைச்செயலாளர்கள் பாப்புராஜ் மூர்த்தி ஜெயபிரகாஷாம் குமார் பாலகணேஷ் ஐயப்பன் லிங்கராஜ் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.