• Wed. Apr 1st, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

அனைத்து தொழிற்சங்கத்தினர் இணைந்து மறியல் போராட்டம்..,

ByP.Thangapandi

Feb 12, 2026

மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கைவிட வலியுறுத்தியும், விதை மசோதா, மின்சார திருத்த மசோதாவை நிறைவேற்ற கூடாது என பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய பொது வேலை நிறுத்த மறியல் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.,

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் உசிலம்பட்டி முருகன் கோவிலிலிருந்து பேரையூர் ரோடு வரை ஊர்வலமாக சென்று பாரத ஸ்டேட் வங்கி முன்பு மறியல் மற்றும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.,

இந்த போராட்டத்தில் அரசின் பொதுச் சொந்துக்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது, தொழிலாளர் விரோத போக்கை கைவிட வேண்டும் என கண்டன கோசங்களை எழுப்பி பாரத ஸ்டேட் வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 100 க்கும் அதிகமானோரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.,