அகில இந்திய இளையோர் இறகு பந்து ( பேட்மிட்டன்) போட்டிகள்
மதுரை சின்ன உடைப்பு ஒபாஸ் அரங்கத்தில் நடைபெற்றது.

19 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான போட்டிகள் நடைபெற்றது. இதில் டெல்லி, மும்பை , கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட 28 மாநிலங்கள் மற்றும் டையூ, டாமன், பாண்டிச்சேரி உள்ளிட்ட 8 யூனியன் பிரதேசங்களில் இருந்து
1016 வீரர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த ஏழு நாட்களில் பல்வேறு பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் , கலப்பு இரட்டையர், தனி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று பரிசளிப்பு விழா நடைபெற்றது.
தமிழ்நாடு இறகு பந்து போட்டி சங்க செயலாளர் அருணாச்சலம், மதுரை மாவட்ட இறகுபந்து சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் துணைத் தலைவர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளும் சான்றிதழ் பரிசு வழங்கினர். தனி நபர்களுக்கு ஐம்பதாயிரம் மதிப்புள்ள காசோலை கோப்பைகளும் இரட்டையர்களுக்கு 82,000 காசோலைகள் கோப்பைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.














; ?>)
; ?>)
; ?>)