வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில், 40 தொகுதிகளிலும் அமமுக தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
கர்நாடக அரசை கண்டித்து மன்னார்குடியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், இவ்வாறு பேசினார். இதனால் ஓபிஎஸ் தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் இருவரும் இணைந்து பயணிக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்த நிலையில் தற்போது டிடிவி தினகரன் இவ்வாறு அறிவித்திருப்பதால் ஓபிஎஸ் என்ன செய்யப் போகிறார் என கேள்வி எழுந்துள்ளது.








