• Sun. Feb 1st, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

ஆங்கிலத்தில் மொழி மாற்றி பாடிய அலெக்ஸாண்டர் பாபு..,

ஜாய் பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு மட்டுமே. காண்டு, கேட்டு ரசித்தனர். குறைந்த இசைக்கருவிகளுடன். தனிமனிதனாக அலெக்ஸாண்டர் பாபு பங்கேற்ற இசை நிகழ்ச்சி. வடக்கன் குளம் ஜாய் பல்கலைகழகத்தில், நடைபெற்ற ஒரு மணி நேரம் மட்டுமே அலெக்ஸாண்டர் பாபு நடத்திய பல்சுவை நிகழ்வு மாணவர்களை மட்டுமே அல்ல. பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் ஜாய் ராஜா,இணைவேந்தர்கள், பேராசிரியர்கள்
என அந்த அரங்கில் கூடியிருந்த அனைவரையும் ஒருங்கே ஈர்த்தது.

நிகழ்வின் தொடக்கமாக. அலெக்ஸாண்டர் பாபு மாணவர்களை பார்த்து எழுப்பிய கேள்வி.? நிகழ்வை இறைவணக்கத்துடன் தொடங்குவோமா.
தமிழ் கடவுள் யார்.? என மாணவர்களை பார்த்து கேள்வி எழுப்பியதும். எதிரே இருந்த மாணவர்கள் ஒவ்வொருவர் வேறு,வேறு தெய்வங்களின் பெயர்களை உச்சரிக்க. அந்த ஓசைக்கிடையே அலெக்ஸாண்டர் பாபு மருதமலை மாமணியே என உச்ச ஓசையில் பாட…… அரங்கமே அதிர்ந்தது.மாணவர்கள் எழுப்பிய கை ஒலியின் ஓசை…
மருதமலை மாமணியே முருகையா என்ற ஓசைக்குள் அடங்கிப்போனது.

கவியரசர் கண்ணதாசன் எழுதிய அந்த பாடல் வரிகளில். கவியரசர் வைத்திருந்த ஒரு சூத்திரம்.பாடல்வரிகளின் ஒவ்வென்றின் முடிவிலும். ஐயா என்ற சொல்லின் முற்றுப்புள்ளியுடன் முடிவடையும் தன்மையை வெளி படுத்தியதுடன். பாடலுக்கு இசையமைத்த குன்னக்குடி வைத்தியநாதனின் கை வயலினில் ஆடி எழுப்பிய ஓசையில் உள்ள வேறுபாடுகளை தெரிவித்தவர் அடுத்து எழுப்பிய கேள்வி.

தமிழில் வெளியாகியுள்ள நீண்ட பக்த்தி பாடல் எது.? விடையையும் அவரே தெரிவித்தார்.

கந்த சஷ்டி கவசம் தான் நீண்ட நெடிய பாடல். சூலமங்கலம் சகோதிரிகளால். கந்தசஷ்ட்டி கவசம் தமிழர்கள் வாழும். கடல் கடந்த நாடுகளில் இன்றும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது என சொன்னவர் உச்ச ஓசையில் கந்தசஷ்ட்டி வரிகளை பாடத்துவங்கினார்.

அலெக்ஸாண்டர் பாபு சரியாக ஒரு மணி நேரத்தில் நிகழ்வை நிறைவு செய்ததும். பார்வையாளர்கள் மத்தியில் எழுந்த விருப்பம் இன்னும் ஒரு முறை தமிழ் பாடலான.’ காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன் என்ற. கவியரசரின் தமிழ் வரிகளை அப்படியே ஆங்கில மொழி மாற்றம். பார்வையாளர்களை ஒருங்கே ஈர்த்தது.

ஜாய் பல்கலைக்கழகம் வேந்தர் ஜாய் ராஜா. அலெக்ஸாண்டர் பாபு க்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.

ஜாய் பல்கலைக்கழகம் மாணவர். பென்சிலால் வரைந்த அலெக்ஸாண்டர் பாபு வின் படத்தை கொடுத்தபோது. மாணவர்கள் எழுப்பிய உற்சாக ஓசை அமைதியாக
நீண்ட நொடிகளானது.