புதுக்கோட்டை மார்ச் 12 புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இலக்கியப் பேரவை சார்பில் இளம் கவிஞர் மீ. சு.கோகுல் ரிஷ்வந்த் எழுதிய “வெப்ப சலனத்தில் ஒரு பனித்துளி'” எனும் கவிதை நூல் வெளியிட்டு விழா ஆர் கே திருமண மஹாலில் நடைபெற்றது.

விழாவிற்கு இலக்கிய பேரவை தலைவர் பாபு ஜான் தலைமை வகித்தார் ஆலங்குடி பேரூராட்சி தலைவர் ராசி முருகானந்தம் இலக்கிய பேரவையின் கௌரவத் தலைவர் அ. க. முத்து ஒளிரும் வளர்மதி பதிப்பகம் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக இலக்கிய பேரவையின் பொருளாளர் ஆசிரியர் கருணாகரன் வரவேற்றார். நிகழ்ச்சியில் ‘”வெப்ப சலனத்தின் ஒரு பனித்துளி'” கவிதை நூலை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ.மெய்ய நாதன் கலந்து கொண்டு கவிதை நூலை வெளியிட்டார்.

முதல் பிரதியினை இலக்கியப் பேரவைத் தலைவர் பாபு ஜான் தமிழ்ச்செம்மல்கவிஞர் ரமா ராமநாதன் செயலாளர் கவிஞர்கள் ராமு, கோவிந்தசாமி, சிவானந்தன், மணிராஜ், ராஜசேகர், பாலசுப்பிரமணியன் மணி ஆசிரியர், கருப்பையா, ராஜகோபால், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்டத் தலைவர் கவிஞர் வெள்ளைச்சாமிமற்றும் பலர் கவிதை நூலினை பெற்றுக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தியாகராஜ் முன்னாள் பேரூராட்சி தலைவர் சத்யமூர்த்தி நகர காங்கிரஸ் தலைவர் அரங்குலவன், ரங்கநாதன் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் கே பி கே படையப்பன் உள்பட கவிஞர்கள், பத்திரிக்கை மட்டும் ஊடகத்துறையினர் நடைப்பயிற்சி நண்பர்கள் இலக்கியப் பேரவை உறுப்பினர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக இளம் கவிஞர் மீ. சு. கோகுல் ரிஸ்வந்த் ஏற்புறை நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் முடிவில் இலக்கிய பேரவை மணிராஜ் நன்றி கூறினார்.




