• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

காவலரின் கையை கடித்த அஜித் ரசிகர்கள் கைது!

திருச்சி மாவட்டம், லால்குடியில் உள்ள அன்பு தியேட்டரில் நேற்று அதிகாலை காட்சி திரையிடப்பட்டிருக்கிறது. அப்போது டைட்டில் காட்சி ஓடிக் கொண்டிருந்த போது ரசிகர்கள் பலத்த கரகோஷம் எழுப்பி ஆரவாரித்து கொண்டிருந்தனர். அப்போது திரைக்கு முன்பாக நின்று நடனமாடியவர்களில் இருவர் திரைக்கு முன்பாக சர வெடியை கொளுத்த முயற்சி செய்திருக்கிறார்கள். இதனை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் சுரேஷ் இரண்டு பேரையும் தடுத்திருக்கிறார்.

இதனால் இரு தரப்பிற்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது! இதில் ஆத்திரப்பட்ட காவலர் சுரேஷ் 2 பேரை சரமாரியாக தாக்கியதால், அதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் காவலர் சுரேஷின் காக்கி சட்டையை கிழித்து அவரின் தோள்பட்டையில் கடித்து வைத்து இருக்கிறார்கள்.

இதனால் லால்குடி காவல் நிலையத்தில் சுரேஷ் புகார் அளிக்க, டால்மியாபுரத்தைச் சேர்ந்த அஜித்தின் ரசிகர்கள் அருண்குமார், கோபிநாத் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.