• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தேசிய மாணவர் படை வீரர்களுக்கு வான்நோக்கும் நிகழ்ச்சி

ByKalamegam Viswanathan

Jun 12, 2023

நேரு நினைவு கல்லூரியில் தேசிய மாணவர் படை சிறப்பு முகாம் நடந்து வருகிறது. இதில் பல்வேறு பள்ளி கல்லூரிகளில் சேர்ந்த 600 க்கு மேற்பட்ட தேசிய மாணவர் படை மாணவ மாணவிகள் பங்கேற்று வருகின்றனர். இவர்களுக்கு காலை 4 மணி முதல் அழகிய நிலா, வளையங்க்களுடன் சனிகோள், பட்டையுடன் வியாழன் கோள், புதன் கோள், யுரெனஸ் கோள் ஆகியவை அதிநவீன தொலைநோக்கி வழியாக காண்பிக்கப்பட்டது.


இந்த நிகழ்ச்சியை இயற்பியல் துறை உதவி பேராசிரியர் ரமேஷ் ஒருங்கிணைத்தார். கல்லூரித் தலைவர் திரு பொன். பாலசுப்பிரமணியன் அவர்கள் தொடங்கிய் வைத்தார். கல்லூரி செயலர் பொன்.இரவிச்சந்திரன், முதல்வர் முனைவர் வெங்கடேசன், ஒருங்கிணைப்பாளர் முனைவர் மு.மீனாட்சி சுந்தரம், கல்லூரி தேசிய மாணவர் படை அலுவலர் முனைவர் பிரபு, துறை தலைவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்