திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தமிழ்நாடு ரிம் ஃபயர் & ஏர் ரைஃபிள்ஸ் பெஞ்ச் ரெஸ்ட் அசோசியேஷன் மற்றும் precihole Sports சார்பில் 3வது தேசிய அளவிலான ஏர் ரைஃபிள் பெஞ்ச் ரெஸ்ட் சூட்டிங் போட்டி அசோசியேஷன் நிர்வாகிகள் வாசு, ராஜா, மணிகண்டன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில்,சேர்மன் மதுரை பாண்டியன் அப்பளம், அகில உலகத் தலைவர் மாமதுரையர் அமைப்பு,மாநில தலைவர் தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர்வத்தல் சங்கம் முனைவர் க.திருமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியைத் துவக்கி வைத்து வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் அவார்டுகள் வழங்கி கௌரவித்தார்.
மொத்தம் 8 மாநிலங்களில் இருந்து 52 போட்டியாளர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். மாணவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் உற்சாகமாக இணைந்தனர். இந்திய அளவில் இதுவரை நடைபெறாத வகையில் சிறப்பாக நடந்த இந்நிகழ்வு, தேசிய சூட்டிங் போட்டிகளில் ஒரு உன்னத தருணமாக அமைந்தது.