• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

2024 பிப்ரவரி 3 ல் கேட் தேர்வு தொடங்கும் ஏஐசிடிஇ அறிவிப்பு..!

Byவிஷா

Aug 28, 2023

2024ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதியன்று கேட் தேர்வு தொடங்கும் என ஏஐசிடிஇ அறிவித்துள்ளது.
பொறியல் பட்டப்படிப்பை முடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் பொறியியல் பட்டதாரி திறன் தேர்வு (கேட்) நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வினை பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி) மத்திய கல்வி நிறுவனங்களுடன் இணைந்து நடத்துகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான கேட் தேர்வு குறித்த அறிவிப்பை இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி) வெளியிட்டுள்ளது. அதில், 2024-ல் நடைபெறவுள்ள கேட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு வரும் 30-ம் தேதி தொடங்கி செப். 29-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 3, 4, 10 மற்றும் 11-ம் தேதிகளில் தேர்வுகள் நடத்தப்படும் என கூறியுள்ளது. தேர்வானது கணினி வாயிலாக நாள்தோறும் காலை மற்றும் பிற்பகலில் நடத்தப்படும். இதனை ஐஐஎஸ்சி, 7 ஐஐடி-க்களுடன் இணைந்து நடத்த உள்ளது. தேர்வு முடிவுகள் அடுத்த ஆண்டு மார்ச் 16-ம் தேதி வெளியிடப்பட்டு, அதே மாதம் 23-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை மதிப்பெண் அட்டைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் கேட் தேர்வு நடைபெறும் நாட்களில், வேறு எந்த தேர்வுகளும் நடைபெறாதபடி தொழில்நுட்பம் சார்ந்த கல்வி நிறுவனங்கள் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.