புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே நச்சாந்துபட்டி மற்றும் தேக்காட்டூர் கிராமத்தில் தமிழக முன்னாள் முதல்வரும் எதிர்கட்சித் தலைவருமான புரட்சி தமிழர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க புதுக்கோட்டை அஇஅதிமுக தெற்கு
மாவட்ட கழக செயலாளரும்,முன்னாள் தமிழக வீட்டுவசதி வாரிய தலைவருமான பிகே.வைரமுத்து அவர்களின் வழிகாட்டுதலின்படி அரிமளம் வடக்கு ஒன்றிய செயலாளர் கடையக்குடி S.திலகர் மற்றும் கோட்டூர் பாலாஜி குமரேசன் அவர்களின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட கோடைகால தண்ணீர் பந்தலை மாவட்ட செயலாளர் பிகே.வைரமுத்து திறந்து வைத்தார்.இதில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் விதமாக தர்பூசணி,வாழைப்பழம்,வெள்ளரிக்காய்,தர்பூசணி, சர்பத்,மோர்,நுங்கு,தண்ணீர் ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

பொதுமக்களும் ஆர்வமுடன் அவற்றை பெற்றுசென்று தங்களது தாகத்தை தணித்து சென்றனர்.மேலும் பேருந்தில் பயணித்த பயணிகளுக்கும் தர்பூசணி வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.