அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்த, 2026 சட்டமன்ற தேர்தல் முதல் கட்ட வாக்குறுதிகளாக, நகரப் பேருந்துகளில் ஆண்களுக்கு இலவச பயணம், குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.2,000 நிதியுதவி, பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க ரூ.25,000 மானியம் உள்ளிட்ட 5 முக்கிய திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

அந்த வாக்குறுதிகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், அரியலூர் மாவட்ட அதிமுக சார்பில் துண்டு பிரசுர விநியோக நிகழ்ச்சி நடைபெற்றது. அரியலூர் அண்ணா சிலை முதல் தேரடி வரையிலான கடைவீதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை, அதிமுக மாவட்டச் செயலாளரும் முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ். ராஜேந்திரன் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மா.அவைத் தலைவர் ஜெ.கே.என். இராமஜெயலிங்கம், மாவட்ட துணைச் செயலாளர் தங்க. பிச்சமுத்து, மாவட்டப் பொருளாளர் அன்பழகன், மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் ஓ.பி. சங்கர், இணைச் செயலாளர் பிரேம்குமார், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜீவா அரங்கநாதன், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் ஓ. வெங்கடாஜலபதி, மாவட்ட சிறுபான்மை அணி செயலாளர் அக்பர் ஷெரீப், பொதுக்குழு உறுப்பினர் வைகோ சிவபெருமாள், ஒன்றியச் செயலாளர்கள் டி. செல்வராசு, பொய்யூர் பாலசுப்பிரமணியம், சிலம்பூர் மருதமுத்து, வைத்தியநாதன், விக்ரம பாண்டியன், வழக்கறிஞர்கள் எஸ்.வி. சாந்தி, செல்ல சுகுமார், சிவஞானம், நகரச் செயலாளர் ஏ.பி. செந்தில் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.






