• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அதிமுகவின் ஊழல் பட்டியலும் வெளியிடப்படும்- அண்ணாமலை அதிரடி

ByA.Tamilselvan

Apr 14, 2023

பாஜக தலைவர் அண்ணாமலை திமுக ஊழல் பட்டியில் மட்டுமல்ல அதிமுக ஊழல் பட்டியலையும் வெளியிடுவேன் என அதிரடியாக பேட்டியளித்துள்ளார்
ஏப்ரல் 14-ம் தேதி திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் சொத்து மற்றும் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று அண்ணாமலை தெரிவித்தார். திமுகவின் இந்த ஆட்சி மட்டுமல்லாமல், கடந்த திமுக ஆட்சியிலும் நடைபெற்ற ஊழல்களையும் வெளியிட இருப்பதாக கூறினார்.
அதே போல தன பேட்டியில் ஊழலை எதிர்க்க ஆரம்பித்தால் ஒரு கட்சியை மட்டும் எதிர்க்க முடியாது. மொத்தமாக எதிர்க்க வேண்டும். எனவே தமிழகத்தில் ஆட்சியிலிருந்த அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலும் வெளியிடப்படும். அடுத்தாண்டுக்குள் அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன்” எனக் கூறினார்.