தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சி சார்பில் பொதுக் கூட்டங்கள், திண்ணை பிரச்சாரங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது .

அந்த வகையில் செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் காமராஜபுரம் முக்கிய சாலைகளில் ,40வது வார்டு வட்டக் கழகச் செயலாளர் அப்பு என்கிற நாகராஜ் ஏற்பாட்டில் வீடுகளுக்கு நேரடியாக சென்று திமுக ஆட்சியில் நடைபெற்றும் அவலங்களை எடுத்துரைத்து திண்ணை பிரச்சாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் 50-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் சாலை வழியாக நடந்து சென்று துண்டு பிரச்சாரங்களை வழங்கினர். அப்போது அதிமுகவினர் சாலை நேரம் முழுவதுமாக மறைத்து நடந்து சென்றதால் பொதுமக்கள் இயல்பான வழித்தடங்கில் செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.
மேலும் உரிய போலீஸ் பாதுகாப்பு இல்லாததால் அதிமுகவினர் இஷ்டம் போல் சாலையை மதித்துக் கொண்டு சென்றனர். முக்கிய பிரதான சாலையில் கூட்டம் கூட்டமாக நடந்து சென்று பிரசாத்தில் ஈடுபட்டதால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது .

அது மட்டும் இல்லாமல் ஆடம்பரம் விளம்பரத்துக்காக வட்ட செயலாளர் அப்பு என்கிற நாகராஜ் என்பவர் திடீரென இயந்திரத்தை வைத்து கலர் காகிதங்களை சாலையில் பறக்க விட்டதால் வாகன ஓட்டிகள் மீது விழுந்தது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க முடியாமல் கடும் அவதிப்பட்டனர்.
எனவே முறையாக பிரசாத்தில் ஈடுபடுபவர்களுக்கு மட்டும் காவல்துறையினர் அனுமதி வழங்க வேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை கொடுத்துள்ளனர்.





