
மதுரை மாநாட்டிற்கு அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் அலைகடலென குடுமபத்துடன் திரண்டு வாருங்கள் என அதிமுக அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி கேட்டுக்கொண்டுள்ளார்.
மதுரையில் நாளை (ஆகஸ்ட் 20ஆம் தேதி) அ.தி.மு.கவின் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு, மதுரையில் இந்த பிரமாண்டமாக மாநாடு நடைபெறுகின்றது. அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டிற்காக மதுரை வலையங்குளம் பகுதியில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு மேடை மற்றும் பந்தல் என பிரமாண்ட முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதுரை மாநாட்டிற்கு அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் அலைகடலென திரண்டு வர வேண்டும் என அதிமுக அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்டக் கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை, குடும்ப நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு கட்சியையும், ஆட்சியையும் நடத்தி வருபவர்களுக்கு மத்தியில், “இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்” என்று வாழ்ந்து மறைந்த வரலாற்று நாயகர் “பொன்மனச் செம்மல்” புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நல்லாசியோடும், எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும் என்று சூளுரைத்த நம் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா, ஆகியோரின் பூர்ண நல்லாசியோடும்
பல்வேறு சோதனைகளையும், துரோகங்களையும் தான்டி , கோடான கோடி தொண்டர்களின் நல்லாதரவோடு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் பொறுப்பினை ஏற்று, கழகம் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்ற ஒரே லட்சிய இலக்கோடு பணியாற்றி வரும் தமிழக முன்னாள் முதலமைச்சர், தமிழக எதிர்கட்சி தலைவர், கழக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடியார் தலைமையில் மதுரையில் மாபெரும் பொன்விழா எழுச்சி மாநாடு (ஆகஸ்ட் 20ஆம் தேதி) ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகின்றது. காலையில் கொடியேற்றி மாநாட்டு பந்தலை திறந்து வைத்து மாலையில் எடப்பாடியார் சிறப்புரையாற்ற இருக்கின்றார். தமிழகம் முழுக்க 20லட்சத்திற்கும் அதிகமான கழக தொண்டர்களும் பொதுமக்களும் மாநாட்டு பந்தலையும் மாநாட்டில் சிறப்புரையாற்றும் எடப்பாடியார் வீர உரையை கேட்க தயாராக உள்ளனர். தென் மாவட்டம் அவரது வருகையை எதிர்பார்த்து உள்ளது. தமிழகம் முழுவதிலும் எடப்பாடியார் ஆட்சி எப்போது வரும் என்று ஏக்க பெரும் மூச்சு கேட்டுக்கொண்டே இருக்கின்றது. இந்த மாநாடு தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமையும். பொன்விழா எழுச்சி மாநாட்டில் விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் இருந்து கழக மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, மாநகராட்சிப் பகுதி, கிளை, வார்டு, வட்ட அளவில் பணியாற்றி வரும் அனைத்து கழக நிர்வாகிகளும், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் குடும்பம் குடும்பமாக கழக கொடியேந்தி அலைகடலென கலந்து கொள்ள வேண்டும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களில், மக்கள் எவ்வித இன்னல்களுக்கும் ஆளாகாத வகையில் தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்துள்ளனர். ஆனால், தற்போதைய விடியா திமுக ஆட்சியின் திறமை இன்மையால், மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதை நாம் அனைவரும் கண்கூடாகப் பார்க்கிறோம். இதற்கெல்லாம் விரைவில் விடிவு காலம் பிறக்க வேண்டும் என்றால் அது, தமிழக மக்களின் பேரன்பைப் பெற்றிருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தால் மட்டுமே முடியும். எனவே மதுரையில் நடைபெறும் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டில் கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் வேண்டுகோளை ஏற்று கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் திரளாக வருகைதந்து கலந்துகொள்ளுமாறு அன்போடு அழைக்கிறேன் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அதிமுக தொண்டா்கள் மதுரையில் திரண்டு புதிய அத்தியாயம் படைக்க வேண்டும் இ்வ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
