மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட கருவேலம்பட்டியில் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை போடுவதற்கும் மற்றும் அரசு பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை தொடங்கி வைப்பதற்காக திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா வருகை தந்தார்.
அப்போது அவரை வரவேற்பதற்காக எம்ஜிஆர் பாடல் போடப்பட்டது. இந்தப் பாடலைக் கேட்ட தொண்டர் ஒருவர் போதையில் நடுரோட்டில் நடனம் ஆடிக் கொண்டிருந்தார். பின்னர் எம்எல்ஏ கார் வந்த போதும் காருக்கு முன்பாக நின்று நடனமாடியது பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்தது.