கள்ளக்குறிச்சியில் கள்ளச்சார பிரச்சனை குறித்து, மதுரை அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடலூர் மாவட்டம், கள்ளக் குறிச்சியில், சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதைக் கண்டித்து, மதுரையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் .
இந்த ஆர்ப்பாட்டுக்கு, முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், செல்லூர் கே.ராஜு ஆகியோர்கள் தலைமை வைத்தனர். சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, முன்னாள் உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள், அதிமுகவின் உள்ள பல்வேறு அமைப்பு நிர்வாகிகள், தமிழக அரசைக் கண்டித்து குரல் எழுப்பினர். முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசும்போது: தமிழக அரசு கள்ளச்சாரத்தை கட்டுப்படுத்த தவறி விட்டதாகவும், இதனால், ஏழை மக்கள் பாதிக்கப்படுவதாகும் குற்றம் சாட்டினார். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, தமிழகத்தில் கள்ளச்சாராயம் பெருகி வருவதை அரசு உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்றும், இதனால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் தமிழக முதலமைச்சர். இந்த விஷயத்தில், தனிக்கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மதுரையில் அதிமுக ஆர்ப்பாட்டம்
