மார்ச் 8ஆம் தேதி அதிமுக சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்படும் என அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சித் தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மகளிர் அணியின் சார்பில், வருகின்ற 8.3.2024 வெள்ளிக் கிழமை காலை 10 மணியளவில், “சர்வதேச மகளிர் தினம்” கொண்டாடப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான ‘புரட்சித் தமிழர்’ திரு. எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்று சிறப்பிக்க உள்ளார். கழக மகளிர் அணியின் சார்பில் நடைபெற உள்ள சர்வதேச மகளிர் தின விழா நிகழ்ச்சியில், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள். முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும், கழக மகளிர் அணியில் மாநில, மாவட்ட மற்றும் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், செயல் வீராங்கனைகளும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ‘புரட்சித் தமிழர்’ திரு.எடப்பாடி கே. பழனிசாமி ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.