• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக புதிய நிர்வாகிகள் கே.டி.ராஜேந்திரபாலாஜியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

ByA.Tamilselvan

Apr 19, 2022

விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.புதிதாக தேர்வு செய்யப்பட்டநிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தமிழக முழுவதும் அ.தி.மு.க., வில் புதிய நிர்வாகிகளுக்கான உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது.நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகிகளுக்கான பதவிகளுக்கு மனுக்கள் பெறப்பட்டு, பரிசீலிக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுகவில் கடந்த 16ம் தேதி கட்சி நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. இதில் ஒருமானதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஒன்றிய செயலாளர்களாக விருதுநகர் கிழக்கு தர்மலிங்கம், மேற்கு கண்ணன், வடக்கு மச்சராஜா, சிவகாசி கிழக்கு ஆரோக்கியம், மேற்கு வெங்கடேஷ், வடக்கு கருப்பசாமி, தெற்கு லட்சுமிநாராயணன், ராஜபாளையம் வடக்கு குருசாமி, தெற்கு நவரத்தினம், ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு மான்ராஜ் எம்எல்ஏ, தெற்கு மயில்சாமி, வத்திராயிருப்பு வடக்கு சுப்புராஜ், தெற்கு சேதுவர்மன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நகர செயலாளர்களாக விருதுநகர் முகம்மது நெய்னார், ராஜபாளையம் வடக்கு துறைமுருகேசன், தெற்கு பரமசிவம், திருவில்லிபுத்தூர் முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், பேரூர் செயலாளராக செட்டியார்பட்டி அங்குதுரைப்பாண்டியன், சேத்தூர் பொன்ராஜ்பாண்டியன், சுந்தரபாண்டியம் மாரிமுத்து, எஸ்.கொடிக்குளம் சங்கரமூர்த்தி, வத்திராயிருப்பு வைகுண்டமூர்த்தி, டபுள்யோ புதுப்பட்டி ஜெயகிரி, மம்சாபுரம் ராஜேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளனர். சிவகாசி மண்டல செயலாளர்களாக கிருஷ்ணமூர்த்தி, கருப்பசாமிபாண்டியன், சாம் (எ) ராஜாஅபினேஷ்வரன், சரவணக்குமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய நிர்வாகிகள் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.