• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

அதிமுக பேரூராட்சி உறுப்பினர் திமுகவில் ஐக்கியம்

நாமக்கல் பகுதி அதிமுக பேரூராட்சி உறுப்பினர் திமுகவில் இணைந்தார்.நாமக்கல் மேற்கு மாவட்டம், பள்ளிபாளையம் ஒன்றியம், ஆலம்பாளையம் பேரூராட்சி மன்றம் 6 வார்டு உறுப்பினர் ஏ.பி.பாலசுப்பிரமணியம் அதிமுகவிலிருந்து விலகி நாமக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.எம்.மதுராசெந்தில் தலைமையில் ஆலம்பாளையம் பேரூர் கழக செயலாளர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

அதை அடுத்து பள்ளிபாளையம் ஒன்றிய செயலாளர் வெப்படை ஜி.செல்வராஜ் சந்தித்து வாழ்த்து பெற்றார்.உடன் பேரூர் கழக செயலாளர் திரு.எஸ்.பி.கார்த்திராஜ், கழக நிர்வாகிகள் குணசேகரன், முருகேசன், ஆறுமுகம் ஆகியோர் இருந்தனர்.