• Mon. May 6th, 2024

மத்திய நிதியமைச்சருடன் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு..!

Byவிஷா

Oct 3, 2023

பா.ஜ.க – அதிமுக கூட்டணி முறிந்துள்ள நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமனுடன் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலை தொடர்ந்து அதிமுகவின் தலைவர்கள் தொடர்பாக எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தல் மட்டுமின்றி வரும் சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணியை முறித்து கொள்வதாக அதிமுகவில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இக்கட்சிகளும் தனி தனி கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்கும் என்றும், விரைவில் கூட்டணி குறித்தான தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் சூழலில் தற்போது மற்றுமொரு பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுகவின் எம்.எல்.க்கள் வால்பாறை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, பொள்ளாச்சி ஜெயராமன், மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது வானதி ஸ்ரீனிவாசனும் உடனிருந்தார். இதில் குறிப்பிடத்தக்க விஷயமென்னவென்றால், சில தினங்கள் முன்பு எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஏற்றால் தான் பாஜகவுடன் கூட்டணி என கூறிய பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார்.

இன்று பாஜகவின் மாநில துணை தலைவர் விபி துரைசாமி, அதிமுக பாஜக கூட்டணி தொடரவேண்டும் என்று கூறியதும், தற்போது தனியாக 3 எம்.எல்.ஏ’க்கள் சந்தித்திருப்பது மரியாதை நிமித்தமாக தான் இது நடைபெற்றதா? அல்லது அரசியலும் ஏதேனும் பேசப்பட்டதா? என்ற பல கேள்விகள் எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *