

விருதுநகர் மாவட்டம். அதிமுக உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஆய்வு பணி முகாம்
அதிமுக பூத் கமிட்டி கழக நிர்வாகிகள் அமைத்தல்,இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணி உறுப்பினர் சேர்க்கை,மற்றும் கழக வளர்ச்சிப் பணி தொடர்பான ஆய்வு பணி`நடைபெற்றது.

விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் R.K.ரவிச்சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. விருதுநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மைக்கேல் ராயப்பன்சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான
எதிர் கோட்டை சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். காரியாபட்டி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் தோப்பூர் முருகன் வரவேற்பு பேசினார். காரியாபட்டி மேற்கு ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட பூத் கமிட்டி அமைத்தனை ஆய்வு செய்தனர் .

இந்நிகழ்ச்சியில் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள் , ஒன்றிய நிர்வாகிகள் , ஒன்றிய சார்பு அணி செயலாளர்கள் கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்

