• Tue. Mar 10th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

அதிமுகவைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணைந்தனர்..,

ByV. Ramachandran

Jul 25, 2025

கீழப்பாவூர் மேற்கு ஒன்றியம் குலசேகரபட்டி ஊராட்சி காமராஜர் நகர் பகுதி அதிமுகவைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணைந்தனர்.

மாவட்ட மகளிர் அணி வலைதள பொறுப்பாளர் சாலி மேரி அவர்கள் ஏற்பாட்டில்,

காமராஜர் நகர் அதிமுகவை சேர்ந்த முத்து குமார், அந்தோணி ராஜ், நவீன் குமார், , சங்கர், தினேஷ்குமார் , ராகவேந்திரா, விக்கி, உள்ளிட்ட நபர்கள் அதிமுகவிலிருந்து விலகி முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் சிவ பத்மநாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

நிகழ்வின் போது மாவட்ட மகளிர் அணி வலைதள பொறுப்பாளர் சாலி மேரி கிளைக் கழக செயலாளர் சுந்தர்ராஜ் ஒன்றிய கவுன்சிலர்கள் தர்மராஜ், சங்கர், மாவட்ட பிரதிநிதி துரைப்பாண்டியன் பொறியாளர் அணி முன்னாள் மாவட்ட துணை அமைப்பாளர் கபில் தேவதாஸ், சற்குணம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

கழகத்தின் இணைந்த அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து முன்னாள் மாவட்ட செயலாளர் சிவ பத்ம நாதன் வரவேற்றார்.

உடனடியாக ஓரணியில் தமிழ்நாடு நிகழ்வின் மூலம் உறுப்பினராக சேர்ந்தனர்.