



நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மறைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமிபாண்டியன் பூத உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார், முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டட அதிமுகவினர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் துணைப்பொதுச்செயலாளருமான. வீ.கருப்பசாமிபாண்டியன் நேற்று உடல் நலக்குறைவினால் காலமானார், அவரின் மறைவுச் செய்தியை அறிந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, விருதுநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட அதிமுகவினர் இன்றையதினம் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள மறைந்த கருப்பசாமி பாண்டியன் இல்லத்திற்கு நேரில் சென்று அங்கு வைக்கப்பட்டுள்ள அன்னாரின் பூத உடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்கள்.
பின்னர் முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் குடும்பத்தினருக்கு அதிமுக பொதுச்செயலாளர், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி கடம்பூர் செ. ராஜு, அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை உறுப்பினர் இசக்கி சுப்பையா, திருநெல்வேலி மாநகர் மாவட்டச் செயலர் தச்சை என். கணேசராஜா உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். முன்னதாக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அஞ்சலி செலுத்தினார்.




