• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் அதிமுக பொதுக்கூட்டம்…

ByK Kaliraj

Mar 5, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் நடிகை விந்தியா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி..,
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியில் அத்தியாவசிய மற்றும் கட்டுமான பொருட்கள் விலை தாறுமாறாக அதிகரித்து விட்டது. திமுக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் எதிலும் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்துகளும், உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பட்டாசு வெடிவிபத்துக்கு திமுக ஆட்சி தான் காரணம். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு திமுக அரசு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குகிறது. அதே பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கி வந்த நிலையில், அதிமுக அளித்த அழுத்தத்தினால் தற்போது ரூபாய் 4 லட்சம் ரூபாய் தமிழக அரசு நிவாரணமாக வழங்கியுள்ளது.

பட்டாசு தொழில் தற்போது பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது. தீப்பெட்டி தொழில் அடைந்துள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் தீப்பெட்டி மீதான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்திலிருந்து 12% ஆக குறைக்கப்பட்டது. தீப்பெட்டி, பட்டாசு, அச்சக தொழில்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டு தொழில் பாதுகாக்கப்பட்டது அதிமுக ஆட்சி காலத்தில் தான். திமுகவின் 4 கால ஆட்சியில் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை புதுப்பிக்க முடியவில்லை. பட்டாசு தொழிலாளர்கள் பட்டு உடுத்த கூடாதா? பட்டாசு விற்பனை வணிகர்களுக்கு லைசன்ஸ் வழங்க மறுக்கிறது. அதிமுக ஆட்சி காலத்தில் பட்டாசு ஆலைகளுக்கு சாலைகள் போடப்பட்டன.‌ அதிமுக ஆட்சியில் பட்டாசு, தீப்பெட்டி, அச்சக தொழில், நெசவு தொழில் பாதுகாக்கபட்டது.

திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் முடங்கி கிடக்கிறது. திமுக ஆட்சியில் சிறுமிகள் முதல் வயதான மூதாட்டிகள் பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கஞ்சா போதை கலாச்சாரம் காரணத்தால் கொலை கொள்ளை சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் திமுக ஆட்சியில் முடக்கப்பட்டது தான் திமுகவின் சாதனை. தாலிக்கு தங்கம் வழங்கும் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தது அதிமுக. தாலியை அறுக்கும் ஆட்சியை திமுக நடத்தி வருகிறது. மகளிருக்கு இலவச பஸ் திட்டத்தை அமல்படுத்துவதாக திமுக காரணத்தை சொல்லி பல்வேறு திட்டங்களை முடக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் அரசு மட்டும் தனியாக ரூபாய் 5 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளது. 73 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடன் வாங்கி குவித்துள்ளது. திமுக ஆட்சியில் வீட்டு, குடிநீர், சொத்து, உள்ளிட்ட வரி உயர்த்திய காரணத்தினால் அரசுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் என நான்காண்டுகளில் 4 லட்சம் ரூபாய் கோடி வருமானம் 5 லட்சம் கோடி ரூபாய் கடன் ஆக மொத்தம் ஒன்பது லட்சம் கோடி ரூபாய் கொண்டு தமிழக அரசு புதிய திட்டங்களை கொண்டு வந்துள்ளது.

அதிமுக ஆட்சியில் சிவகாசி-திருவில்லிப்புத்தூர் சுற்றுச்சாலை திட்டம் அறிவிக்கப்பட்டு, 25 கோடி ரூபாய் அளவுக்கு நில எடுப்பு செய்யப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக இத்திட்டம் முடக்கி வைக்கப்பட்ட நிலையில், வரும் சட்டமன்றத் தேர்தல் ஆதாயத்திற்காக திமுக அரசு இத்திட்டத்திற்கு நேற்று பூமி பூஜை போட்டுள்ளது. தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு வந்தது. அதிமுக ஆட்சிக்காலத்தில்‌ தான். மக்கள் வரிப்பணத்தை திருடுவது திமுக. அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்களை திமுக ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறது. திமுகவுக்கு 2026 சட்டமன்றத் தேர்தலில் அருமையான ஆப்பை மக்கள் அடிக்க உள்ளனர் என தெரிவித்தார்.

இதன் பின்னர் இக்கூட்டத்தில் பேசிய நடிகை விந்தியா..,

ஆளும் திமுக அரசு போலியாக‌ நாடகம்‌ போட்டும் விளம்பரம் செய்தும் மக்களை ஏமாற்றி வருகின்றனர். மக்களாகிய நீங்கள் ஏமாறக்கூடாது. வால் இருக்கிறது எல்லாம் குரங்காகி விட முடியாது. குரங்கு எல்லாம் அனுமார் ஆகி விட முடியாது என்ற பழமொழிக்கேற்ப யாராவது ஒருவர் பெரிய பதவிக்கு வர வேண்டும் என்றால் தகுதியும் திறமையும் இருக்க வேண்டும். அப்பாவுடைய(ஸ்டாலின்) அதிர்ஷ்டத்தால் மகன் (உதயநிதி) உச்சத்தை தொடலாம் என விமர்சித்தார்.

ஒரு குட்டிக்கதையில் சொரிநாய் (திமுக) முனிவர் (தமிழக மக்கள்) புனித நீரை தெளித்து வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகக்கு எதிராக வாக்கு செலுத்தி சொறிநாய் நடுத்தெருவிற்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார். வெட்டி விளம்பரங்களையும், வேலைக்காக பேச்சுகளையும் நம்பி தகுதி இல்லாத ஒரு சொறி நாயை (திமுக தலைவர் ஸ்டாலின்) கூட்டி வந்து, ஆட்சியில் உட்கார வைத்துள்ளனர்.

ஹிட்லர், இடியமின் சர்வாதிகாரிகளுக்கு மத்தியில் ஸ்டாலின் குடும்பத்தினர் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடன் தமிழக முதல்வர் ஸ்டாலினை ஒப்பிட்டு முட்டாள் ஆட்சி நடக்கிறது என விமர்சித்தார். துண்டுச் சீட்டில் எழுதி வைத்ததை கூட சரியாக படிக்கத் தெரியாதவர் தான் முதல்வர் ஸ்டாலின். யூட்யூபில் அப்பாவின் அட்டகாசங்கள் என தேடிப் பார்த்தால் தெரியும். ஸ்டாலினும் அவரது மகன் உதயநிதியும் தான் ட்ரெண்டிங்கில் இருக்கின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் அப்பா வேடம் போட நினைக்கிறார். திமுகவினர் ஸ்டாலின் தான் அப்பா என போஸ்டர் ஒட்டி வருகின்றனர். ஒரு பிச்சைக்காரன் பிச்சை எடுக்கும் பொழுது அம்மா தாயே என்று தான் சொல்லுவார். இந்த உலகத்திலாவது அப்பா தகப்பா பிச்சை போடுங்க என கேட்க மாட்டார். ஒரு பிச்சைக்காரருக்கு இருக்கிற அறிவு கூட முதல்வர் ஸ்டாலினுக்கு கிடையாது. முதல்வர் ஸ்டாலின் அப்பாவாகி சாதனை செய்ய நினைக்கிறார். ஏற்கனவே ராம் சித்ரா என்பவர் 94 வயதில் அப்பாவாகி முதலிடம் பிடித்தார். முதல்வர் ஸ்டாலின் அப்பாவாக ஆசைப்படுகிறார்.

பேரன், பேத்தி எடுத்து 71‌ வயதான ஸ்டாலின் தாத்தா ஆன பின் அப்பா ஆக வேண்டுமென அவர் மட்டுமே இருப்பார். மக்கள் மனதார அழைத்தால் தான் அதற்குப் பெயர் பட்டம். அதுவே முதல்வர் ஸ்டாலின் (அப்பா) என அமைச்சர்களை வைத்து கட்டாயப்படுத்தி அழைப்பது தான் ஒரு தரைமட்டமான செயல் ஆகும்.

இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தமிழக மக்களை முதல்வர் ஸ்டாலினை அப்பா என அழைப்பதாக கூறுவது அப்பாளா செல்லு சைத்தான்னே.அப்பா ஸ்டாலினே என ஒரே மாதிரியாக இருக்கும். கவுண்டமணி காமெடியில் வரும் டேய் தகப்பா டயலாக் போல முதல்வர் ஸ்டாலின் அப்பா என சுற்றித்திரிந்தாள் டேய் தகப்பா என மக்கள் காரி மூஞ்சியில் துப்ப போகிறார்கள்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒன்றும்அம்மா சும்மா ஆகவில்லை. பிஞ்சு பச்சைக் குழந்தைகள் குடிக்கும் பால் விலையை உயர்த்திய ஸ்டாலின் அப்பா ஆக முடியாது. தமிழர் தானே அப்பா என்று அழைப்பார்கள். முதல்வர் ஸ்டாலினை அழைத்தால் நைனா என்று தானே அழைக்க வேண்டும். சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் நைனா, (தெலுங்கு) பேசிவிட்டு தமிழ் வேசம் போட்டுக் கொண்டிருக்கிறார்.

உதயநிதி பச்சோந்தி, நேரத்திற்கு தகுந்தார் போல் பச்சோந்தியாக மாறி கொள்வார். உதயநிதி ஸ்டாலின் மேடைக்கு கிறிஸ்டியன், பிரியாணிக்கு முஸ்லிம், ஓட்டுக்கு இந்து ஓட்டுக்கு நிறம் மாறுகிற பச்சோந்தி பால்டாயில் உதயநிதி ஸ்டாலின். பால்டாய்லென கூகுளில் தேடினால் உதயநிதியின் புகைப்படம் தான் வருகிறது. உதயநிதி ஸ்டாலின் நேருக்கு நேர் என்னுடன் விவாதம் செய்ய தயாரா என உதயநிதிக்கு அழைப்பு விடுத்தார்.

திமுக ஆட்சியில் மக்களுக்கு வேதனைகளும் சோதனை‌ தான் அதிகம். அதிமுக ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுகவின் 4 ஆண்டு கால ஆட்சியில் பெண்களுக்கு எதிரான 20,000 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளது. போதை கலாச்சாரம், கஞ்சா, டாஸ்மார்க், கள்ளச்சாராயத்தினால் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

மகளிர் உரிமைத்தொகை ரூபாய் ஆயிரம் வழங்குவதாக கூறி, ஆட்சிக்கு வந்த திமுக தகுதி வாய்ந்த நபர்களுக்கு மட்டுமே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தது என்றால் தமிழக பெண்கள் போட்ட பிச்சை என தெரிவித்தார்.