மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே பொங்கல் விளையாட்டுப் போட்டி நடைபெற்ற போது ஒலிபெருக்கி அமைத்ததில் ஏற்பட்ட தகராறில், அதிமுக நிர்வாகி குத்திக்கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திருப்பரங்குன்றத்தை அடுத்த நிலையூர் 1வது ஊராட்சிக்குட்பட்ட கூத்தியார்குண்டு கிராமத்தில் காளியம்மன் கோவில் தெருவில் நேற்று (ஜன: 18) நடைபெற்ற பொங்கல் விளையாட்டு போட்டிக்கு அதிமுக மதுரை கிழக்கு புறநகர் மாவட்ட மீனவர் அணி இணைச் செயலாளர் பிச்சை ராஜன், தனது ஒலிபெருக்கி அமைப்பை அமைத்துள்ளார்.
தனது இடத்தை பிச்சை ராஜன் பிடித்து விட்டார் என்று ஆத்திரமடைந்த பாலமுருகன், என்பவர் பிச்சை ராஜனை கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு தலைமறைவானதாக தெரிகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





